திரள், தமிழ்ச் செய்திகளைப் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து திரட்டி நவீன மொழித் தொழில்நுட்ப உதவியுடன் தரும் ஒரு முயற்சி.
இங்கே பகிரப்படும் செய்திகள் அனைத்தும் பதிப்பாளருக்கே உரிமை. இதில் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் சிறியளவுப் படமும் சில வரி செய்தியும் மட்டுமே காட்டப்படும். கூடுதல் செய்திகளை அத்தளத்திற்குச் சென்று படிக்கலாம்.
கடந்த ஒருநாளில் அதிகம் பேசப்படும் தலைப்புகள், அதிக செய்தி கொண்ட மாவட்டங்கள், அதிகம் பயன்பட்ட குறிச்சொற்கள், நிலப்படவழிச் செய்திப் பரவல் போன்றவை காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு செய்தியையும் செயற்கை நுண்ணறிவும் வாணியின் இயல்மொழி பகுப்பாய்வும் கொண்டு பெயர் பொருள் சுட்டி(entity identification) மற்றும் குறிச்சொல் (keyword identification) கணித்து, புவியியல் தகவல் முறைமையுடன்(GIS) காட்சிப்படுத்தப்படுகிறது. பேசு பொருள்வாரியாகவும், காலவாரியாகவும் செய்திகள் தொகுக்கப்படுகிறது.
வசதிகள்
HEADLINES
கடந்த 18 மணிநேரத்தில் பல்வேறு ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.
MAPVIEW
நிலப்பட வடிவில் செய்திகளைப் பிரித்துக் காட்டும் வசதி. விருப்பமான பகுதிகளில் உள்ள செய்திகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்கலாம். வரைபடத்தில் உள்ள 👁 குறியைச் சொடுக்கி செய்திகளை கூகிள் மேப்பில்லேயே காணமுடியும். செய்திகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் அடிப்படையில் இவை எந்திரவழிக் கற்றல் முறையில் வகைப்படுத்தப்படுகிறது.
FACTCHECK
பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த உண்மைத் தன்மையைச் சரி பார்க்கும் செய்திகளின் தொகுப்பு
SEARCH
கடந்த 2021 ஏப்ரல் முதல் செய்திகளைத் தேட உதவும் வசதி.
STATISTICS
தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச் செய்தி ஊடகத்தின் அலெக்சா தரவரிசைப்பட்டியல் இங்கே மாதம்தோறும் இற்றை செய்யப்படுகிறது.
ARCHIVE
காலவாரியாக ஒவ்வொரு ஊடகச் செய்திகளையும் ஆவணப்படுத்துகிறது. திரளில் இணைக்கப்பட்டுள்ள ஊடங்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம். தினசரி மற்றும் சில நுட்பச் சிக்கல் காரணமாக சில ஊடகங்களைத் தவிர RSS feed வசதி கொண்ட சிறு மற்றும் பெரு ஊடங்களின் செய்திகளைத் திரள் திரட்டிவருகிறது.
DISTRICTS
செய்திகளில் அதிகம் பேசப்பட்ட தமிழக மாவட்டங்களின் பட்டியல். இதன் மூலம் செய்திகளை மாவட்டவாரியாக அறிந்துகொள்ள முடியும்.
TRENDING
இன்றைக்கு அதிகம் பேசப்படும் தலைப்புகளின் பட்டியல்.