Posts in category

வேளாண்மை


கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் இன்னும் 15 நாட்களுக்கு அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் நேற்று பெங்களூருவில் அம்மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குமாரசாமியின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் …

பூச்சிக் கொல்லி மருந்துகள், பயிர்களுக்கும், சூழலுக்கும் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பூச்சிகளுக்கு, பயிர்கள் இரையாகாமல் காப்பாற்ற, தடுப்பு மருந்தைப் போட முடியும் என, பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எல்லா தாவரங்களுக்கும், தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன், அவற்றின் மரபணுக்களிலேயே உண்டு. இயற்கை அளித்திருக்கும் இந்த திறனை மேலும் அதிகரித்தாலே, தாவரங் களால் பூச்சிகளை விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஹெல்சிங்கி பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இவர்கள் பிரஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி …

தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 ஆயிரம் கிலோவாக இருந்த உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 685 கிலோவாக குறைந்துள்ளது. உயர் விளைச்சல் ரகங்கள் பயன் படுத்தாதது, தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் கடைப்பிடிக்காதது, பூச்சி மற்றும் நோய்களுக்கு கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மகசூல் குறைவு காரணிகளாக உள்ளன. மகசூல் பெறுவது எப்படி நிலத்தை சமன்படுத்துதல், பார் – சால் அமைப்பு முறை, தரமான விதை தேர்வு, விதை அளவை …

இந்தியாவிலேயே மேகாலயா மாநிலத்தில் மட்டும்தான் 93.6% வேளாண் கடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறது. மற்ற மாநிலங்களில், சிக்கிம் உட்பட சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன் விகிதாச்சாரம் 1.67% என்று அதலபாதாளத்தில் உள்ளது. எனவே வேளாண் கடன் வழங்குதலில் முறையான திட்டமிடல் அவசியம் என்றும், யாருக்குத் தேவை உள்ளதோ அவர்களுக்குத்தான் கடன் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டியுள்ளது. வழங்கப்படும் வேளாண் கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெறுவது சொற்பம்தான், சில வேளைகளில் …

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு இடங்களில் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2100 கன அடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தக்காளி, மிளகாய் விலை குறைந்து விவசாயிகள் பறிக்காமல் விடும் நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அதிகம் பேர் ஒரே நேரத்தில் ஒரே விதமாக பயிர் செய்வது தான். இம்முறையை நிறுத்த வேண்டும். பருத்தி, குண்டுமல்லி, சிறு பாகற்காய் ஆகிய பயிர்கள் ஆண்டு முழுவதும் நல்ல பயன் தரும். வெள்ளை தங்கம்: தென் மாவட்டங்களில் பருத்தியை வெள்ளை தங்கம் என்பார்கள். இதில் புதிய தொழில் நுட்பங்களை பகுத்தி லாபம் பெறலாம். செடியில் வளரும் நுனிகளை கிள்ளிவிட …

தனி மனிதராக ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட காடுகளை உருவாக்கி இருக்கிறார் என்றால் நம்பவே முடியாதுதான். நான்கு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சுபேந்து சர்மாவின் பெயரை சொல்லிதான் தினம் தினம் தலையசைத்து வாழ்த்துகின்றன. எவ்விதமான செயற்கை உரங்களையும் பயன்படுத்தாமல் மிகவும் குறுகிய காலத்தில் இவரது Afforestt என்கிற நிறுவனம் இந்த சாதனையை செய்திருக்கிறது. “சுற்றுச்சூழலில் எல்லோரையும் போலவே எனக்கும் ஆர்வமுண்டு. காடுகளை வளர்ப்பதை சேவையாக மட்டுமின்றி என்னுடைய வாழ்வியல் தேவைக்கான வணிகமாகவும் செய்து வருகிறேன்” என்று நேர்மையாகப் பேசுகிறார் …

சிறுதானியங்கள்  என்னென்ன உள்ளது என்று கேட்டால் பொதுவாக சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் போன்ற பதில் வரும். இன்னும் கொஞ்சம் அதிகம் தெரிந்தவர்கள் “காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்கு”ன்னு சொல்வாங்க. “நெல்லில் இருப்பதுபோல் சிறுதானியங்களில் ரகங்கள் எதாவது உள்ளதா?” என்று கேட்டால் பலவிதமான பதில் கிடைக்கிறது. முழுமையான பதில் எங்கேயும் கிடைக்கவில்லை. ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலை என்று கொஞ்சம் சுற்றியபோது  பல விடயங்கள் தெரியவந்தது. சாமை, தினை, கம்புனு எதனை எடுத்தாலும் பல …

தமிழகத்தில் 60 சதவிகிதம் பரப்பளவில் பயிர்கள் மானாவாரியாக மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டுகிறது. பொதுவாக கோடை காலத்தில் மொத்த மழையளவில் 15 சதவிகிதம் அதாவது 140 மில்லி மீட்டர் மழை மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் பொழிகிறது. இச்சமயத்தில் கிடைக்கின்ற மழையினை சேமித்து பயன்படுத்தி கொள்வதன் மூலமும், பாத்தி, பயிர் மேலாண்மை மூலமும் நிலத்தின் மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்து மானாவாரி பயிர்களில் அதிக லாபம் பெற முடியும். மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க …

கடினப் பாறைகளில் இருந்து கிரானைட் வெட்டி எடுக்கும்போது “வெர்மிகுலேட்” எனும் கனிமப்பொருள் கிடைக்கும். புழுக்கள்  போன்று நீள் தன்மையும், வளையும் தன்மையும் இருப்பதால் ‘வெர்மிகுலாரிஸ்’