பொது

மலேசியாவில் ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி வரி ரத்து!!!
மலேசிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி ரத்து செய்யபடுகிறது. மீண்டும் பழைய விற்பனை மற்றும் சேவை வரியை கொண்டு வர மலேசிய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் எப்போது இந்த வரிமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கவில்லை. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை ஈடு செய்ய முடியும் என சந்தை வல்லுநர்கள் …

நாளை முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது!!!!
கடுமையான வெப்ப காலத்தைக் குறிக்கும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ளதை நினைத்து ஏராளமானோர் இப்போதே கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால், கத்திரி வெயில் தொடங்கினாலும் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது குறித்து இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, கத்திரி வெயில் தொடங்கப் போகிறது என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். தமிழகத்தில் அடுத்த …

வருமான வரி தாக்கல் செய்ய புதிய படிவங்கள்
மத்திய அரசு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய படிவங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது 2017 – -18ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு விபரங்களை தாக்கல் செய்வதற்காக, இந்த படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் துவக்கத்திலேயே, வரி தாக்கலுக்கான புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், தாமதமாக வரி கணக்கு தாக்கல் …

தமிழ் மொழி-முதன் மொழி
தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் …

இயற்கை முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்க சில வழிகள்..!
1.தண்ணீர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். 1.1 எள்: உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் …

யெஸ் வங்கியின் நிகர லாபம் 29% ஆக உயர்வு!!!!!
முக்கிய தனியார் மற்றும் பிரபல வங்கியான யெஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.1,179 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.914 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 27.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.5,606 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.7,163 கோடியாக இருக்கிறது. வங்கியின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றான நிகர வட்டி வரம்பு 3.4 சதவீதமாக இருக்கிறது. …

சென்னை அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றிய ரயில்வே போலீஸ்க்கு தலா ரூ.1 லட்சம் பரிசுடன் தீரர் விருது
சென்னையில் ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரப் பிடியிலிருந்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸ் படை கான்ஸ்டபிள் கே.சிவாஜிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தைரியத்துக்கான விருதை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார். வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து இளம்பெண்ணை மீட்டார் இளம் காவலர் ஒருவர். சென்னை வேளச்சேரியிலிருந்து அன்று இரவு 11 மணியளவில் …

பெண்களுக்கான சொத்துரிமைகளும், திருமண ஒப்பந்தங்களும்…!!!!
இன்று ஆணும் பெண்ணும் ஓரளவிற்கு மன முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்வதால், சமீப காலங்களாக, திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மேலை நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், திருமண ஒப்பந்தங்கள் போட்டுப் பதிவு செய்து கொள்வதும் புழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்ட்து. ஆகவே, சராசரி மக்களும் இது குறித்து அறிந்து கொள்வதும், இது பற்றிப் பேச வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது.திருமண ஒப்பந்தம் என்பது, திருமணத்திற்கு ஆகும் செலவு முதல், திருமணத்தின் பின், இணைந்து …

கார் ஏற்றி 9 பள்ளி குழந்தைகள் பலி – பாஜக பிரமுகர் எஸ்கேப்
பீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் மனோஜ் பைதா, கடந்த 24ம் தேதி காரை வேகமாக ஓட்டி வந்தபோது, சாலையில் நடந்து சென்ற 9 பள்ளி குழந்தைகள் மீது மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். உடனே காரை நிறுத்திவிட்டு பாஜக பிரமுகர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், பாஜ பிரமகர் மனோஜ் பைதா கார் ஏற்றி …

நீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..!
நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறைபாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோயை விட, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோய் மூன்று மடங்கு ஆபத்தானது. இந்த வகை இதய தசை நோய்க்கு ஆங்கில மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்துவது தற்போதைய சூழலில் …