Posts in category

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பேஸ்­புக் நிறு­வ­னம், இந்­தாண்டு பிப்­ர­வ­ரி­யில், ‘வாட்ஸ் ஆப் – பே’ என்ற பெய­ரில், சோதனை அடிப்­ப­டை­யில், பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்­கி­யது.10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், இச்­சே­வையை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து, அடுத்த வாரம், வாட்ஸ் ஆப் – பே நிறு­வ­னம், அதி­கா­ர­பூர்வ டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., மற்­றும் ஆக்­சிஸ் வங்­கி­க­ளு­டன், வாட்ஸ் ஆப் – பே ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.வாட்ஸ் ஆப் – பே வரு­கை­யால், ஏற்­க­னவே டிஜிட்­டல் …

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று முன்தினம் சோதனை முயற்சியாக 2 முறை இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கி வரும், ரிசர்ச் சென்டர் இமாரட்தான் (ஆர்சிஐ) இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் முதலில் தயாரித்த …

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி சார்பாக ‘கிம்போ’ எனும் மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, சுதேசி சம்ரிதி சிம் கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக சுதேசி மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தஜராவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுதேசி சிம்கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமார யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ எனும் மெசேஜிங் தளத்தை …

நிலவின் மர்மமான பக்கக்கங்களை ஆராய்ந்து பூமிக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கும் செயற்கைக் கோள் ஒன்றை சீனா இன்று வெற்றிகரமாக செலுத்தியுள்ளது, இது மாபெரும் லட்சிய இலக்கின் ஒரு பகுதியாகும். இச்செயற்கைக் கோளுக்கு கியூகியோ (மக்பீ பாலம்), என்று பெயரிடப்பட்டுள்ளது. 400 கிலோ கொண்ட இச்செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  சீனாவில் அமைந்துள்ள சிசாங் செயற்கைக்கோள் விண்வெளி மையத்திலிருந்து, (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5:28க்கு,  லாங்மார்ச்  4சி ராக்கெட் ஒன்று செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு விண்ணில் பாய்ந்ததாக சீன …

ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 19, 522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா (6,393 …

மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’ ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம். மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா …

வேவு பார்க்க உதவும் ஒளிப்படக் கருவிகொண்ட ஓட்டுனரின்றி பறக்கும், ‘ட்ரோன்’ வாகனத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இதை தயாரித்துத் தர கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘புராஜக்ட் மேவன்’ என்ற இத்திட்டத்தில் கூகுள் பங்கேற்கக் கூடாது என கூகுளில் பணியாற்றும், 4,000 பேர் கூட்டாக மனுவை அளித்தனர். ஆனால், கூகுள் அதை நிராகரித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பணியாளர்கள் வேலையிலிருந்து விலகினர். ஏற்கனவே ராணுவத்தில் ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த தடை கோரி, …

சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ‘நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை’யைத் தொடங்கி வைக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். உடன் கூடுதல் டிஜிபி (குற்ற ஆவண காப்பகம்) சீமா அகர்வால், கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய் (தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம் (வட சென்னை), எம்.சி.சாரங்கன் (தென் சென்னை), ஏ.அருண் (போக்குவரத்து), எம்.டி.கணேச மூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்டோர். இனி அபராதத் தொகையை போலீஸாரிடம் ரொக்கமாக செலுத்த வேண்டாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட 6 வகைகளில் டிஜிட்டல் …

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தண்ணீர் பயன்படுத்த அவசியம் இல்லாத சிறுநீர் கழிக்கும் யூரினல் கோப்பைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கு ‘சன்மிங்க்’ என்று பெயர். ஒரு முறை நிறுவி விட்டால், இந்தக் கோப்பை 10 ஆண்டுகளுக்கு மாறாத தன்மை கொண்டது. இந்தக் கோப்பைகளின் மேலே கண்ணாடிப் பதத்தில் உள்ள, சில்வர் குளோரைடு முலாம் பூசப்பட்டுள்ளது. இதில் கெடுதல் விளைவிக்கக்கூடிய நுண்கிருமிகளும், நாற்றமும் பரவாது. பராமரிக்க ஆட்கள் தேவையில்லை. தண்ணீரும் தேவையில்லை. வாசனை திரவியங்களையும் பயன்படுத்த அவசியம் …

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா 1998 மே 11, மே 13ல், ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இணைந்தது. இச்சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. …