Posts in category

செய்திகள்


பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார். சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு …

சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ, தேவையான ஊக்கம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்,” என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். புதிய அறிவிப்புகள்: நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு, நான்கு கோடி ரூபாயில், புதிய மத்திய அலுவலகம் கட்டப்படும் சென்னை, மயிலாப்பூர், துணை மின் நிலைய வளாகத்தில், 16 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த கணினி மின் தடை நீக்கும் மையம், ‘ஸ்கேடா’ மையம், புதிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தலைமை பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் …

கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் இன்னும் 15 நாட்களுக்கு அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் நேற்று பெங்களூருவில் அம்மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குமாரசாமியின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் …

புதுடில்லி, ‘பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனத்தின் போது, திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி முறையில், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் போது, தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ என, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன.மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து, பொதுத் துறை நிறுவன செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது பல்கலை …

துாத்துக்குடி, துாத்துக்குடியில் மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர். கலவர சம்பவங்களின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான குழுவினர் சேகரித்துவருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் இன்னமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களுக்கு பின் விசாரணை வேகம் எடுக்கும்.

தாமரைப்பூ போலவே தாமரை தண்டும் மருத்துவ குணம் மிக்கது. இதனை தாமரைக்கிழங்கு என்றும் சொல்வர். கலோரிகள் மிகவும் அதிகம். நார்சத்து நிரம்பியவை. விட்டமின் சி, விட்டமின் பி 6, தாது உப்புகள் உள்ளன. தண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். இதயத்தை வலுவாக்கும். எந்த தாமரை, எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை. அதைப்போல் சமைக்கும் போது உப்பு போட்டாலும் தாமரைத்தண்டில் உப்பு ஏறுவதில்லை. காஷ்மீரில் தாமரைத்தண்டினை, ‘நந்த்ரு’என்பர். வதக்கல் மற்றும் பக்கோடா செய்வர். மூலநோயை குணப்படுத்த இலங்கையில் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு …

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. இந்த சட்டத்தால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளியை சேர்ந்த, பல் மருத்துவர் சவீதா, 2012ல் உயிரிழந்தார். ஓட்டெடுப்பு : இந்த சம்பவம், அயர்லாந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் பெரியளவில் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்றுவது தொடர்பாக, பொது ஓட்டெடுப்பு நடத்த, அயர்லாந்து அரசு முன்வந்தது. கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை வாபஸ் …

கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் 33 சதவீத ஓட்டுகளை வாங்கியது. லீக் கட்சி 17 சதவீத வாக்குகளை வாங்கியது. கடந்த பத்து வாரங்களாக இருந்த நிச்சயமற்ற சூழல் ஒரு வழியாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் …

இலங்கையில் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் எப்போதும் அவதானமாக இருக்குமாறு …