Posts in category

சுகாதாரம்


குழந்தைகள் குளியலறையில் வைத்து விளையாடும், மஞ்சள் நிற வாத்து போன்ற பொம்மைகளில், ஏராளமான நோய்க் கிருமிகள் இருப்பதாக, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘பயோபிலிம்ஸ் அண்ட் மைக்ரோபியம்ஸ்’ என்ற இதழில், இரு நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, குழந்தைகள் நீரில் வைத்து விளையாடும் நான்கு பொம்மைகளில், மூன்றில், நோய் கிருமிகள் இருக்கின்றன. குறிப்பாக, பொம்மைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மட்டமான பாலிமர்கள், கிருமிகளுக்கு நல்ல உணவாக அமைவது தான் காரணம் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குளியல் நீரில் …

நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறைபாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோயை விட, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோய் மூன்று மடங்கு ஆபத்தானது. இந்த வகை இதய தசை நோய்க்கு ஆங்கில மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்துவது தற்போதைய சூழலில் …

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நீரிழிவு நோய் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உணவுப் பழக்கவழக்கம், வயது, உடல் எடை, உடலுறவு போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக அறியப்படுகிறது. மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவை நீரிழிவு நோய்க்கு தற்போதைய மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. நீரிழிவுக்கு மருந்துகள் அளிப்பதை விட, உணவுக்கட்டுப்பாடு மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமையல் பொருட்களாக பயன்படும் மூலிகைகள், …

சீரற்ற வாழ்க்கை முறை, மாறும் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை நீரிழிவினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில் நீரிழிவு நோய் ஏழாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய ரத்த ஓட்டக் குறைபாடு முதல் இடத்திலும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இரண்டாம் இடத்திலும், செரிபரோவாஸ்குலர் நோய் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2015-ஆம் ஆண்டு …

மேப் இந்தியா மற்றும் விசிட் இணைய சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து மத்திய அரசின் மருத்துவ உதவிகளுக்கான “ஸ்வஸ்தா பாரத் எம்-ஹெல்த்” என்ற புதிய குறுஞ்செயலியை உருவாக்க உள்ளன. இந்த குறுஞ்செயலிக்கான வரைபட உதவியை இந்த நிறுவனங்கள் அளிக்க இருக்கின்றன. இந்த குறுஞ்செயலியை தரவிறக்கம் செய்த பின்னர், ஏதேனும் அவசர மருத்துவ சேவைகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை அழைக்க முடியும். அருகிலுள்ள மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், மருந்துக்கடைகள் ஆகியவற்றை அறிய முடியும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை குறுஞ்செய்தி வடிவிலோ, …

முப்பரிமாண உயிரி ஒட்டுப் பொருள் மூலம், மாரடைப்பிற்கு பின்னர் இதயத்தில் சேதமடைந்திருக்கும் இதய திசுவை சரி செய்யும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அவரின் இதய தசைகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காமல், இதயத்தில் இருக்கும் சில செல்கள் இறந்துவிடும். நம்முடைய உடலினால் இது போன்ற இதய செல்களை மீண்டும் உருவாக்க முடியாது. எனவே செல்கள் இறந்து போன  இதயப் பகுதியில், தழும்பு ஏற்பட்டு விடும். …

கேலக்சி நோட் 7 போன்கள் தீப்பற்றும் சர்ச்சையில் சிக்கியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்த சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்து அதிர்ச்சி தரும் வகையில், கேலக்சி எஸ் 7 திறன்பேசிகள் தீப்பிடித்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால் இதனை மறுத்துள்ள சாம்சங் நிறுவனம், கேலக்சி எஸ் 7 வகை திறன்பேசிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என அறிவித்துள்ளது. ”கேலக்சி எஸ் 7 ரக திறன்பேசிகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது வரை இந்த வகை திறன்பேசிகளின் பேட்டரிகள் செயழிலந்துவிட்டதாகவோ …

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. …

சீனாவின் முன்னணி செல்பேசி உற்பத்தி நிறுவனமான ஜியோமி, இந்த முறை வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. பல திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், இந்த முறை கூட்டு முதலீடு மூலம் ஆழ்ந்த உறக்கத்தை அளவிடும் உணர்வி ஒன்றை உருவாக்கியுள்ளது. ”லூனா ஸ்மார்ட் சிலீப் சென்சார்” என பெயரிடப்பட்டுள்ள இந்த உணர்வி, சிறிய தட்டை வடிவில் அமைந்துள்ளது. இதன் விலை சுமார் 700 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணர்வி, பயனாளர் எவ்வளவு ஆழமான உறங்குகிறார்? அது …

ஏழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு தென்னாப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி தடுப்பூசிக்கான சோதனை துவங்கியுள்ளது. ”HVTN 702” என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியானது தென்னாப்ரிக்காவில் உள்ள 18 முதல் 35 வயதிற்குட்பட்ட சுமார் 5400 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் ஆராயப்பட உள்ளன. இந்த தடுப்பூசிதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் திறன் வாய்ந்த தடுப்பூசி என கருதப்படுகிறது. இந்த தடுப்பூசியானது ஹெச்.ஐ.வி வைரசிலிருந்து மனிதனை பாதுகாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் …