Posts in category

சமீபத்திய பத்திரிக்கைச் செய்திகள்

தினமலர்

“நியூட்ரினோ”;… பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை. கடந்த 2010-ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்த சர்ச்சைகளாலும் சூழலியல் சிக்கல்களாலும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது முதல் இப்போது வரைக்கும் நியூட்ரினோ திட்டம் குறித்த வழக்கோ அறிவிப்போ வரும்போதெல்லாம் சர்ச்சைகளும் எழும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 28-ம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ திட்டம் அமையவிருக்கும் பொட்டிபுரம் கிராமத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் ஊர் மக்கள் சார்பாக மனு கொடுத்தனர். இந்நிலையில் நியூட்ரினோவிற்கு ஆதரவாகவும் சில குரல்கள் இணையதளத்தில் எழ ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை ‘தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.. அதனால் மற்ற மாநிலங்களுக்குப் போகப்போகின்றன. இவை மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் திட்டம்’ என்பதாகவே இருந்தன. உண்மையாகவே மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளதா? என்ன நிலையில் அந்தத் திட்டம் இருக்கிறது?

நியூட்ரினோ என்பது என்ன?

உலகின் மிகச் சிறிய துகள் தற்..

“தலித்களே தாங்கள் தலித்களாகப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் சமூகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கடமை உணர்வுள்ள மனிதர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். நான் ஒவ்வொரு முறையும் விதிகளை நிர்ணயிக்கும்போது நாம் தவறாக நிர்ணயிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவர்களைத்தான் நினைத்துக்கொள்வேன். நவீன இந்தியாவின் இன்றைய சூழலில் இந்தப் பேதங்கள் எல்லாம் உருகிக் கரைந்துவிடும். இதுபோன்ற திட்டங்களால் அடுத்த இருபது ஆண்டுகளில் தலித்கள் தங்களுடைய அறிவாற்றலாலும் உழைப்பாலும் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் அப்போது சிறப்புச் சலுகைகள் எதுவும் கேட்கமாட்டார்கள்”.

புதியகல்விக் கொள்கையை வரையறுத்திருக்கும் கல்விக் கமிட்டியின் தலைவரான கஸ்தூரிரங்கன் அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியின் தமிழ் மொழியாக்கம் இது. மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவத்தால், அண்ணனால் படுகொலை செய்யப்பட்ட கனகராஜ் இறந்து நான்கு நாள்களே ஆன நிலையில் வெட்டுக்காயங்களுடன் மூளை தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்ஷினிபிரியாவு..

மதச்சார்பும் கார்ப்பரேட்டுகளும் கட்டுக்குள் வைத்திருக்கும் தேசத்தை இன்னும் 30 ஆண்டுகளில் எப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமோ, அப்படியெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது `லேலா’. தேசத்தின் பெயர் `ஆர்யவர்த்தா’. அதன் தலைவர் பெயர் `ஜோஷி’. 2017-ம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் பலவற்றைக் குவித்த பத்திரிகையாளர் பிரயாக் அக்பரின் `லேலா’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது, அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர். ஷாலினி-ரிஸ்வான், மதச்சார்பு ஓங்கியிருக்கும் காலத்தில் சட்டத்தைமீறி மதக்கலப்பு மணம் புரிந்துகொண்டவர்கள். அவர்களுக்கு லேலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறார். தொடரின் காட்சி இப்படி விரிகிறது, ஊரே தண்ணீர்ப் பஞ்சத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது நீச்சல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் மூவரும். மதப் பாதுகாவலர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி… ரிஸ்வானை, `ஜெய் ஆர்யவர்த்தா’ சொல் என அடித்துத் துன்புறுத்துகிறது. குளத்திலேயே அடித்துக்கொல்லப்படுகிறார் ரிஸ்வான். மதக்கலப்பு ஏற்பட்டுவிட்டதால் அவளைத் தூய்மைப்படுத்துவதற்காகத் தூய்மை முகாம் ஒன்றுக்கு அனுப..

'மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க' என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம். குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். நாம போட்டுட்டு வந்த அந்தக் குப்பைக் கவருக்குள்ள இருக்கிற பழைய சோற்றுக்காக, நாய் அதை குதறிப்போட, காய்கறிக் கழிவுகளுக்காக மாடு அதை நடுத்தெரு வரைக்கும் இழுத்துச் செல்ல… நம்ம வீட்டுக் குப்பை ஒரு தெருவோட சில சதுர அடிகளை நாறடிக்கும். அதிலும் வார இறுதியில் வீசப்படுற மீன் கழிவுகளோட வீச்சும் பக்கத்துத் தெரு வரைக்கும் மூக்கைப் பொத்த வைக்கும். 'நாங்க என்ன பண்றது, குப்பை லாரி எங்க ஏரியாவுக்கு ரெகுலரா வர்றதில்ல…' என்ற காரணத்தில் நியாயம் இருந்தாலும், நம்ம வீட்டுக் குப்பை நாம வசிக்கிற தெருவை பாழாக்காமல் இருக்க, குறைந்தபட்சமா நாம என்ன செய்யலாம்; அந்தக் குப்பைகளை வை..

“தமிழகத்தில், புராதன கலைப்பொருள்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் சிலைகள் உள்ளன. அதன் எண்ணிக்கை எவ்வளவு; அவற்றில் எத்தனை சிலைகள் காணாமல் போயின; மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். கனிமொழி மக்களவையில் இதுபற்றிப் பேசியதையடுத்து, சிலைக் கடத்தல் மற்றும் சிலைப் பாதுகாப்பு குறித்த பேச்சுகள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன.

“மத்திய அரசு, கலாசாரத் துறையின் கீழ் ஒரு குழு அமைத்துச் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தக் குழுவுடன் தமிழக அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. `சட்டப்படி சிலைகளை நாங்கள் விலை கொடுத்துதான் வாங்கியிருக்கிறோம். சிலை கடத்தல்காரர்களிடம் வாங்கவில்லை’ என்று அருங்காட்சியக உரிமையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் காட்டுகிறார்கள். சிலைகளை மீட்பதில் சட்டச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. அருங்காட்சியகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றை மீட்க நடவடிக்கை ..

விரைவில் நாடாளுமன்றத்துக்கு எம்.பி-யாகச் செல்லவிருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் மூன்று எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதென்று நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க உறுதியளித்திருந்தது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி-யாக வைகோ தேர்வுசெய்யப்படுவார் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி-யாக டெல்லிக்கு வைகோ செல்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்கள் தலைவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.பி ஆகப்போகிறார். இந்த உணர்வு எப்படியிருக்கிறது?”

“நாடாளுமன்றத்தில் ஓர் இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது, எங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
உண்மையிலேயே மிகுந்த ம..

பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதியாகக் கருதப்பட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில், 70,300 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டார் வேட்பாளரான அன்புமணி ராமதாஸை வீழ்த்தி, உதயசூரியனை உதிக்கச் செய்துள்ளார் முதல்முறை வேட்பாளரான தி.மு.க.செந்தில்குமார். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிவாகை சூடி நாடாளுமன்றத்துக்குச் சென்ற செந்தில்குமாரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ `பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெறப் போகிறார்’ என்றே அனைத்து ஊடகங்களிலும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதைப் பொய்யாக்கும் வகையில், ஜெயித்தது எப்படியிருந்தது?”;

“கருத்துக்கணிப்புகள் எப்படியிருந்தால் என்ன? எங்களுடைய வெற்றி என்பது ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டதுதான். தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு மற்றும் ஆதரவு, அவர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. வாக்கு எண்ணிக்கையின்போதும் முதல் 8 சுற்றுகள் மட்டுமே முன்னிலையில் இருந்தார். மற்ற அனைத்துச் சுற்றுகளிலும் நாங்களே முன்னிலை வகித்தோம்”.

“மறு வாக்குப் பதிவுக்கான காரணம் என்ன? அதனால் வாக்கு வித்தியாசம் குறைந்..

“;நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க பெற்ற வெற்றிக்குக் காரணம் தி.மு.க-வோ, அதன் தலைவர் ஸ்டாலினோ அல்ல… அந்த வெற்றிக்குக் காரணம், ஓ.எம்.ஜி நிறுவனம்தான்”; என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார். அப்போது, தி.மு.க-வின் வெற்றிகுறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை அவர் தெரிவித்தார். அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவரிடம் நாம் பேசியபோது, “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், `நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றது தி.மு.க-வோ, தலைவர் மு.க.ஸ்டாலினோ அல்ல; ஓ.எம்.ஜி நிறுவனம்தான்’ என்று கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

மேலும் அவர், “மாஃபா பாண்டியராஜன் பேசிய அந்த..

100 வயதைக் கடந்துள்ளார், கேரளாவின் ‘புரட்சி நாயகி’ கே.ஆர்.கௌரியம்மா. மக்கள் செல்வாக்கு மிகுந்த இந்தத் தலைவரின் பிறந்தநாள் விழாவை ஆலப்புழாவில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கிவைத்தார்.

கேரளாவின் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கௌரியம்மா. 1957-ல் கேரளாவில் அமைந்த, முதல் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய், கலால், தேவசம் அமைச்சராகப் பணியாற்றிய இவர், 100 வயதைக் கடந்து ஆலப்புழா மாவட்டத்தில் சதனாடு என்கிற சிற்றூரில் வசித்துவருகிறார் .

உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட நிலச் சீர்திருத்த மசோதா, பெண்கள் ஆணைய மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்தவர் என்கிற பெருமைக்குரியவர் கௌரியம்மா. இ.எம்.எஸ் தலைமையிலான அரசுகளில் இருமுறை, ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசுகளில் இருமுறை அமைச்சராகப் பணியாற்றி கேரளாவில் பல சீர்திருத்தங்களுக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் கௌரியம்மா.

கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் கௌரியம்மாவுக்கு, ஆலப்புழாவில் இன்று பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதையொட்டி, கேரளச் சட்டமன்றத்துக்கு இன்றைய தின..

கடந்தவருடம் இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்த மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவிக்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவியது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத். ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல், சரண்தாஸ் மஹந்த், டி.எஸ்.சிங் டியோ மற்றும் தம்ரத்வாஜ் சாஹு. இந்தக் கடும்போட்டிகளை எல்லாம் கடந்து, இறுதியில் ஒவ்வொரு மாநிலமாக முதலமைச்சர்களைத் தேர்வுசெய்து அறிவித்தார் காங்கிரஸ் ராகுல்காந்தி. இந்தத் தேர்வில் ராகுல்காந்தியின் செயல்பாடுகளுக்கு அடுத்து அதிகம் செய்திகளில் இடம்பெற்ற ஓர் அம்சம், `சக்தி ஆப்'. காங்கிரஸ் தலைமை, தன் ஆதரவாளர்களுடன் நேரடியாக உரையாட உருவாக்கப்பட்ட ஒரு வசதிதான் இது. இதன்மூலமாக தொண்டர்கள் மத்தியிலிருந்து வந்த கருத்துகளை வைத்துதான் முதலமைச்சர்களை ராகுல் முடிவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. தற்போது அதே `சக்தி', புதிய சர்ச்சைகளுக்கும் காரணமாகியிருக்கிறது.

கடந்த மே மாதம் 23-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வ..