Posts in category

கணினி


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பு விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம். மிகவும் பிரபலமான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகிய முந்தைய பதிப்புகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பயன்பாட்டு முறைகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. விண்டோஸூடனான உங்களது அனுபவம் அதிகளவில் இருந்தாலும், விண்டோஸ் 10 ஈர்ப்புக்கு சில உதவிகள் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். அதனால் உங்களுக்கு சில சிறந்த டிப்ஸ்களும், சூட்சமங்களும், வழிகாட்டுதலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்ட (புதுப்பிக்கட்ட) விண்டோஸ் …

அண்ணா பல்கலைகழகத்தின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் மே- 3ல் ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு துவங்கியது.  30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு முறையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தீர்வு : தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில், காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அண்ணா பல்கலையின், தமிழ்நாடு …

சுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா? இணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு …

16-வது உலகத் தமிழிணைய மாநாடு வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனடாவின் தொராண்டோ நகரில் நடத்தவுள்ளதாக உத்தமம் அமைப்பு  தெரிவித்துள்ளது. இம்மாநாட்டுக்கான கருப்பொருளாக ஆழ்த்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும், தமிழில் தரவு அறிவியல் (Data Science) ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வப் பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகமெங்கும் பல்வேறு …

கணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக மாற்றும் புதிய கருவியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியின் மூலம் கணினியை அதிகப்படியான வெப்பநிலையிலும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். கணினித்துறையில் தற்போதைக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சனை, கணினிகள் எப்போதும் குளிர்ச்சியான சூழலில் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரங்களினால், செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த கருவி மூலம் கணினியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. …

கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் எர்த்’ சேவை, பல்வேறு புதிய வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த அந்த நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் பிடித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் பார்க்க முடியும். ”வாயேஜர்” என அழைக்கப்படும் புதிய வசதி மூலம், சுற்றுலாவுக்கு செல்லக் கூடியவர்கள், கூகுள் எர்த்தில் பல்வேறு ஆலோசனைகள், உதவிகளை பெற முடியும். ”திஸ் இஸ் ஹோம்” என்ற வசதி மூலம், உலகம் முழுவதும் உள்ள …

என்னாப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண்டறியும் எந்த வசதியும் முதலில் ஒரு குறிப்பிட்ட திறன் பேசிகளில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முதற்கட்டமாக பீட்டா பதிப்பு வெளியிடப்படுகிறது. பீட்டா பதிப்பில் இந்த வசதிகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே,  மற்ற திறன்பேசிகளுக்கு தனது வசதியை என்னாப்பு நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்நிலையில் என்னாப்பு மூலம் பேசிக்கொள்ளும் இருவர், தாங்கள் …

தொழில்நுட்ப வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறதோ, அதே அளவு சில பாதகங்களையும் அளித்து வருகிறது. குறிப்பாக  சமீபகாலங்களில்  சைபர் தாக்குதல் என்ற பிரச்சனை உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவாகி வருகிறது. இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர் ஸ்கை நிறுவனம், சமீப காலமாக மக்களிடையே சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ”கடந்தாண்டின் இரண்டாம் பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு குறிப்பிடத்தகுந்த அளவு மக்களிடையே வளர்ந்துள்ளது. …

உலகின் முன்னணி மின்னணு நிறுவனமான மைக்ரோசாப்ட்,இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீது சமீபகாலமாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கித் தர அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்டின் ‘ஸ்மார்டர் பிஸ்’ மற்றும் ’ஐடோஸ்’ ஆகிய இரண்டு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் மூலம் வாடிக்கையாளர் தொடர்பு, நிதி மற்றும் கணக்குவழக்கு ஆகியவற்றை …

சென்னையிலுள்ள ஐ.ஐ.டி கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த தேர்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, திறமையான மாணவர்களுக்கு பல லட்ச ரூபாய் ஊதியத்திற்கு வேலைவாய்ப்பு அளிப்பது உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஐ.டி சென்னை வளாகத் தேர்வில், 26 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதன் மூலம் 130 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் படித்த முதுகலை தொழில்நுட்பம் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த …