Posts in category

கட்டுரைகள்


தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் …

தமிழகம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதால் பொறியியல் கல்லூரிகள் பெரும் வேலை வேலைகுறைப்பை செய்து வருகின்றனர். ஏன் மாணவர்களிடயே பொறியியல் ஆர்வம் குறைந்து விட்டது என்று பலவிதமான ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் யதார்த்த நிலையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் தாங்கள் செய்ய வேண்டியதை செய்யவேண்டியதை செய்யாமல் மறந்து விட்டனர். ஆம் தொழில்நுட்பத்தில் நாள் தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு உள்ள நிலையில் அதற்கேற்றார்போல் பாடத்திட்டங்களை உருவாக்கி புதிய …

அன்பர்களே, பண்டுதொட்டே தமிழப்பெருங்குடியினர் அளவை விசாரணையில் (logic andepistemology) பல சிறப்பான நூற்களை யாத்துச் சென்றுள்ளனர். உலக வரலாற்றில் கிரேக்கர்களும் தமிழர்களுமே இப்படிப்பட்ட துறைகளை வளர்த்துள்ளனர். கிரேக்கர்கள் பொறிலிய சிந்தனைச் சார்ந்த அளவையியலைவளர்த்துச் செல்ல தமிழர்களோ நூலிய அறிவியல் சிந்தனைச் சார்ந்த அளவையியலை வளர்த்துள்ளனர். இதன்தொடக்கத்தை முதன் முதலில் தொல்காப்பிய மரபியலில் காண்கின்றோம். பிறகு இதுவே பாசுபத சைவர்களால் நையாயிகம் ஆக்கப்பட்டு பிறகு வைதீகத் துறைகளில் ஒன்றாகவும் திரிபு கண்டது. பிறகு தமழகத்து புத்த சமணதமிழர்களும் வெகுவாக …

[முன் குறிப்பு:– இது புதிய செய்தியல்ல. பழையசெய்திதான். எல்லோரும்அறிந்த செய்திதான். ஏ.பி. நாகராஜன் சொல்ல, நம்ம நடிகர் திலகமும் – நாகேஷ் நடித்தது. பழைய மொத்தை கள்ளை இப்போது பூப் போட்ட புட்டியில் அல்லது வண்ண குப்பியில் [கிளாசில்] தருவது போல என்று வைத்துக் கொள்ளுங்கள்] கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம் – புலமைக்குத் தலைமை தந்த பெருமை – அறிவியலையை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைப்பெற்ற பட்டிமன்றம். சிறப்புடன்… அது ஒரு …

வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள் மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் [Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக் கவிஞர், ” செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்…” புறநானூறு : 30. –என்று பாடியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல்துறையில் என்னென்ன …

இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைட்ரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயு ஒரு பங்கும் உண்டு [h 2 0 ] என்கிறோம். இந்த உணமை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ”பிராணம் ஏசும் அன்யத்வே ” என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது. பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்கு சென்று மண்ணெடுத்து வந்தார்கள். அந்த மண் கறுப்பாக இருந்தது. …

உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன. இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர் பல் துறை அறிவுடையவராய் விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித் தம் பாடல்களில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளனர். சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின், ” ஞாயிறு போற்றும் …

தமிழ் இலக்கியத்தில் ”ஒப்புநோக்குக்கொள்கை” உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்கு தொல்காப்பியரைச் சான்றாக காட்டலாம்.முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை, ” முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே ” என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார். நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் ‘ பாஸ்கல் ‘ என்னும் அறிஞர். இப் …

பொன் நிறுத்தல் அளவை 4 நெல் எடை =1 குன்றிமணி 2 குன்றிமணி = 1 மஞ்சடி 2 மஞ்சடி = 1 பணவெடை 5 பணவெடை = 1 கழஞ்சு 8 பணவெடை =1 வராகன் எடை 4 கழஞ்சு = 1 கஃசு 1 கஃசு = 1 பலம் பண்ட நிறுத்தல் அளவு 32 குன்றிமணி = 1 வராகன் 10 வராகன் = 1 பலம் 40 பலம் = 1 …

இது திரு கிருஷ்ணன் என்பவரின் கட்டுரை! ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்காலமக்களின் அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது. இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. …