Posts in category

உலகம்


நியூயார்க் : உலகளவிலான அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது 96,000 வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் உள்ளனர். 15,000 அதிகாரிகளும், …

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உள்ள அமைதிப்படையில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் உள்ளனர். ஐ.நா.சபை அமைதிப் படையில் இப்போது 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் அமைதிப் படையினரில் 3,737 பேர் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். இவர்களில் இந்திய வீரர்கள்தான் அதிகம். இந்தியாவைச் சேர்ந்த 163 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஐ.நா.சபையின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. இந்த சட்டத்தால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளியை சேர்ந்த, பல் மருத்துவர் சவீதா, 2012ல் உயிரிழந்தார். ஓட்டெடுப்பு : இந்த சம்பவம், அயர்லாந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் பெரியளவில் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்றுவது தொடர்பாக, பொது ஓட்டெடுப்பு நடத்த, அயர்லாந்து அரசு முன்வந்தது. கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை வாபஸ் …

கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் 33 சதவீத ஓட்டுகளை வாங்கியது. லீக் கட்சி 17 சதவீத வாக்குகளை வாங்கியது. கடந்த பத்து வாரங்களாக இருந்த நிச்சயமற்ற சூழல் ஒரு வழியாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் …

ஏமனில் மெகுனு சூறாவளி தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இதில் 3 பேர் இந்தியர்கள். ஆவர். மேலும் இந்தத் சூறாவளி தாக்குதலில் பலர் காணாமல் போகியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. மெகுனு சூறாவளி தொடர்பாக ஏமன் ஊடகங்கள், ”ஏமனின் தோபர் மற்றும் அல் வுஸ்தா ஆகிய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை மெகுனு சூறாவளி தாக்கியது.  சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் காற்று வீசியது. இந்த சூறாவளியில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியர்கள். மேலும் இந்த …

அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச நிருபர்களுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. கடைசி நேரத்தில் தென் கொரிய நிருபர் களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதை அந்த நாடு வரவேற்றுள்ளது. தென் கொரியாவின் முயற்சியால், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் கொரியா – அமெரிக்கா போர்ப் பயிற்சி கொரிய தீபகற்பத்தில் தொடங்கியது. இதற்கு …

நிலவின் மர்மமான பக்கக்கங்களை ஆராய்ந்து பூமிக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கும் செயற்கைக் கோள் ஒன்றை சீனா இன்று வெற்றிகரமாக செலுத்தியுள்ளது, இது மாபெரும் லட்சிய இலக்கின் ஒரு பகுதியாகும். இச்செயற்கைக் கோளுக்கு கியூகியோ (மக்பீ பாலம்), என்று பெயரிடப்பட்டுள்ளது. 400 கிலோ கொண்ட இச்செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  சீனாவில் அமைந்துள்ள சிசாங் செயற்கைக்கோள் விண்வெளி மையத்திலிருந்து, (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5:28க்கு,  லாங்மார்ச்  4சி ராக்கெட் ஒன்று செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு விண்ணில் பாய்ந்ததாக சீன …

சீனா அரசு அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி உள்ள பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா- சீனா இடையே  ‘டோக்லாம்’ பிரச்னையை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சீன எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. உட்கட்டமைப்பு பணிகளை அமைப்பதில் சீனா தீவிரம் காட்டி வருவதாக …

ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 19, 522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா (6,393 …

கம்போடியாவில் துவங்கி உள்ள உலகத்தமிழர் மாநாட்டில்  சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு