Posts in category

இணையத்தில் சிறந்தவை

இணையத்தில் சிறந்தவை

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகள் பரப்பப்பட்டதால் ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ”ஒடிசாவின் நகர்ப்பகுதிகளில் மாலை 3 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய வசதிகள் துண்டிக்கப்படுகின்றன.” என ஒடிசா மாநில உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ”பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் சமூக வலைத்தள கருத்துகளால் …

இந்தியாவிலேயே இணைய வசதிக்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ள மாநிலம் டெல்லிதான் என இந்திய இணையம் மற்றும் செல்பேசி அமைப்பு தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்பு மட்டுமல்லாது, இணைய பங்கேற்பு, இணையச் சூழல், அரசின் இணைய சேவைகள் ஆகியவற்றிலும் டெல்லி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சமீபத்தில் இந்த அமைப்பு, நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து “இந்தியாவில் சிறந்த இணைய வசதியை கொண்டுள்ள மாநிலம்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றை பின்னுக்கு …

கணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக மாற்றும் புதிய கருவியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியின் மூலம் கணினியை அதிகப்படியான வெப்பநிலையிலும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். கணினித்துறையில் தற்போதைக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சனை, கணினிகள் எப்போதும் குளிர்ச்சியான சூழலில் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரங்களினால், செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த கருவி மூலம் கணினியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. …

கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் எர்த்’ சேவை, பல்வேறு புதிய வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த அந்த நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் பிடித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் பார்க்க முடியும். ”வாயேஜர்” என அழைக்கப்படும் புதிய வசதி மூலம், சுற்றுலாவுக்கு செல்லக் கூடியவர்கள், கூகுள் எர்த்தில் பல்வேறு ஆலோசனைகள், உதவிகளை பெற முடியும். ”திஸ் இஸ் ஹோம்” என்ற வசதி மூலம், உலகம் முழுவதும் உள்ள …

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ’ஸ்டீவ் வோஸ்நியாக்’, வரும் 2075-ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிள், முகநூல் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனவும், அந்த காலகட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் உலகை ஆளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் ஐ.பி.எம் நிறுவனம் போல நீண்ட காலத்திற்கு தனது சேவையை அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற சிலிகான் வேலி கருத்தரங்கில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ”கடந்தாண்டின் …

பொது இடங்கள் மற்றும் கணினியில் யூ.எஸ்.பி கேபிள் மூலமாக செல்பேசியை சார்ஜ் செய்பவர் நீங்கள் என்றால், உங்கள் செல்பேசியிலுள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒரு நபர் தனது திறன்பேசியை பொது இடங்களிலோ அல்லது கணினியிலோ, யு.எஸ்.பி கேபிள் மூலம் சார்ஜ் செய்யும் போது, “சைட் சிக்னல்” என்ற தொழில்நுட்பம் மூலம், திறன்பேசியில் பயன்படுத்தப்பட்ட இணையதள விபரங்களை ஹேக்கர்கள் பெற முடியும். மேலும் திறன்பேசியில் உள்ள முக்கிய தகவல்களையும் வேறு இடத்திற்கு கடத்த …

என்னாப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண்டறியும் எந்த வசதியும் முதலில் ஒரு குறிப்பிட்ட திறன் பேசிகளில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முதற்கட்டமாக பீட்டா பதிப்பு வெளியிடப்படுகிறது. பீட்டா பதிப்பில் இந்த வசதிகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே,  மற்ற திறன்பேசிகளுக்கு தனது வசதியை என்னாப்பு நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்நிலையில் என்னாப்பு மூலம் பேசிக்கொள்ளும் இருவர், தாங்கள் …

தொழில்நுட்ப வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறதோ, அதே அளவு சில பாதகங்களையும் அளித்து வருகிறது. குறிப்பாக  சமீபகாலங்களில்  சைபர் தாக்குதல் என்ற பிரச்சனை உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவாகி வருகிறது. இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர் ஸ்கை நிறுவனம், சமீப காலமாக மக்களிடையே சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ”கடந்தாண்டின் இரண்டாம் பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு குறிப்பிடத்தகுந்த அளவு மக்களிடையே வளர்ந்துள்ளது. …

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவிப்பு வெளியானதிலிருந்து, அடுத்தகட்டமாக இனி என்ன செய்வது என பலர் குழப்பத்தில் உள்ளனர். கடன் அட்டை மற்றும் வரவு அட்டை பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்ற கேள்வி வாடிக்கையாளர்களின் மனதில் எழுந்து வருவது மறுக்க முடியாதது. இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனம் தனது தளத்தில் வாங்கப்படும் குறுஞ்செயலிகள், புத்தகங்கள் மற்றும் திரைப்பட நுழைவுச் …

சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, ரயில் டெல் நிறுவனத்துடன் இணைந்து குறிப்பிட்ட இந்திய ரயில் நிலையங்களில் இலவச ஃவை-ஃபை வசதி அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்த ஃவை-ஃபை வசதியானது மற்ற நிறுவனங்களின் ஃவை-ஃபையை விட 15 மடங்கு வேகத்துடன் செயல்படும் எனவும், இதற்கான தொழில்நுட்ப வசதிகளை கூகுள் செய்து தரும் எனவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் இந்தியாவிலுள்ள 23 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச ஃவை-ஃபை …