Posts in category

அரசியல்


பெங்களூரு: கர்நாடக முதல்வராக, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி, பெங்களூரில் நாளை பதவியேற்கிறார். கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., 104, காங்., 78, ம.ஜ.த., 37 இடங்களை கைப்பற்றின. தனிப்பெருங்கட்சியான, பா.ஜ., சார்பில், முதல்வராக பதவியேற்ற, எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன், பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ம.ஜ.த., வுடன், காங்கிரஸ் இணைந்து, ஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வராக, ம.ஜ.த., வின் குமாரசாமி, நாளை பதவியேற்கிறார். இதற்காக, பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி ரத்து செய்யபடுகிறது. மீண்டும் பழைய விற்பனை மற்றும் சேவை வரியை கொண்டு வர மலேசிய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் எப்போது இந்த வரிமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கவில்லை. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை ஈடு செய்ய முடியும் என சந்தை வல்லுநர்கள் …

கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #Yeddyurappa #KarnatakaCM  பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க …

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்’ என, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கடைசி கட்ட அதிரடி பிரசாரங்களால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். கர்நாடகா மாநில சட்ட சபைத் தேர்தலில், சித்தராமையா தலைமையிலான, காங்., 78 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்து உள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்ற நிலை …

நதிகள் இணைப்பு திட்டத்தோடு, அரசியல் கட்சி அறிவிப்பையும், கோவை மாநாட்டில் வெளியிட, ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்த ரஜினி, சென்னையில், நேற்று மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை, தன் இல்லத்தில் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், மக்கள் மன்றத்துக்கு, ‘பூத் கமிட்டி’ நிர்வாகிகளை நியமித்து, உள்கட்டமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார். முக்கியமாக, காவிரி மட்டுமின்றி, தண்ணீர் பிரச்னையை முழுவதும் தீர்க்க, நதிகள் இணைப்பு திட்டமே …

”2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருப்பேன் என்று ராகுல் காந்தி வெளிப்படையாகச் சவால் விடுத்துள்ளார். பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினால் நானே பிரதமராக வருவேன் என்றும் தெரிவித்து இருக்கிறாரர். ராகுல் காந்தியின் துணிச்சலையும், பிரதமர் பதவிக்கான ஆசையையும் பாஜகவினர் வரவேற்க வேண்டும். அதைவிடுத்து, இந்த நாடு, ஒருபோதும் முதிர்ச்சியில்லாத, புகழ்பெற்ற தலைவர்களை பிரதமர் பதவிக்கு ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் மோடி கூறுகிறார். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் ராகுல் காந்தியின் எழுச்சி …

 ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு வரும் ஜீன் 12 ஆம் தேதி  சிங்கப்பூரில் நடக்கிறது. உலக சமாதானத்திற்கான முக்கிய தருணத்தை நாங்கள் உருவாக்க இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று சிறை கைதிகளை ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று வடகொரியா விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து வடகொரியா அதிபர் உடனான சந்திப்பு குறித்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் …

சென்னை: வரும் ஜுன் மாதம் 4-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஜுன் 4-ல் துவங்கி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள்      வெளியாகியுள்ளன. மானிய கோரிக்கை தொடர்பாக துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

மலேசியாவில் எதிர்கட்சிகள் ஆட்சி:உலகின் மிகவும் வயதான பிரதமர் கோலாலம்பூர்: மலேசியாவின் 13-வது நாடாளுமன்றம் கடந்த 7-ம் தேதி கலைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு பிரதமர் நஜீப் துன் ரசாக் வெளியிட்டார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவரும் மாஜி பிரதமருமான மகாதிர் முகமது மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் “222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி …

தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன் மிக தீவிரமாக செயலாற்றிவரும் நிலையில், சாருஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கிறார். ஏனென்றால், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். கமல்ஹாசன் தங்களுக்காக என்ன செய்வார் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேட்கின்றனர். நீங்கள்தான் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர் தமிழர் இல்லையென்றாலும், தமிழ் மக்கள் …