உடல் எடையை குறைக்கவும், வேறு உடல்நல குறைபாடுகளை கண்டறியவும், நோயாளி என்ன சாப்பிடுகிறார் என்பதை கண்காணிப்பது அவசியம். இதற்கு ஒரு புதிய கண்டுபிடிப்பு உதவக்கூடும். அமெரிக்காவிலுள்ள டப்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, 2 சதுர மி.மீ., அளவே உள்ள ஒரு மின்னணு உணரியை, பல்லில் ஒட்டிக்கொண்டால் போதும். அந்த சில்லு, நோயாளி உட்கொண்ட குளூகோஸ், உப்பு மற்றும் மதுவின் அளவை, துல்லியமாக பதிவு செய்துவிடுகிறது. ஒரு சிறிய மொபைல் கருவி ரேடியோ அலைவரிசையை அனுப்ப, அதை உள்வாங்கும் …

பள்ளிகூடம் மற்றும் பல இடங்களில் கரும் பலகையில் எழுதுவது, பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம். அதில், ‘டிஜிட்டல்’ முறையை புகுத்தியிருக்கிறது, ஸ்க்ரிப்பிட் (Scribit). கரும்பலகை, வெண்பலகை, சுவர்கள் என, எந்த சம தளத்திலும் எழுத்து மற்றும் படங்களை அசத்தலாக வரையும் திறன் பெற்றது இந்த கருவி. ஜூன் மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கருவியை, சுவரில் எழுதும் ரோபோ என்றே, ஊடகத்தினர் அழைக்கின்றனர். கணினி அல்லது மொபைல் ஆப் மூலம் ஸ்க்ரிப்பிட்டை இயக்க முடியும். நாம் எழுத …

தொழிற்சாலைகள் ,வீடுகள் என பலவற்றை உருவாக்க மணல் முக்கியமாகும். ஆனால், தற்போது பல நாடுகளில் மணல் கொள்ளை அடிப்பது, கொள்ளையை விலைக்கு வாங்குவதும் விற்கப்படுவதும் அதிகரித்துவிட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆற்று மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இதற்கு மாற்றாக, ஒரு புதிய கட்டுமானப் பொருளை,லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிஉள்ளனர். இந்த புதிய பொருளானது, ஆற்று மணல் மற்றும் கடல் மணலுக்கு ஓய்வு தரும் என எதிர்பார்க்கலாம். பாலைவன மணலை வைத்து மட்டுமே, …

தொழில்நுட்பமானது புதிய கண்டு பிடிப்பிலும்,எளிதில் வளர்ச்சிஅடைவதிலும்,  இதே வேகத்தில் வளர்ந்தால், (buttons)பொத்தான்களை அழுத்தும் விரலைத் தவிர, மற்ற உடல் உறுப்புகள் ஏதும் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும்.இனிமேல் வரும் காலங்களில் இது நிகழும்  என சில சிந்தனையாளர்கள் அவர்களின்  கருத்தைக் கூறுகின்றனர்.

இந்தோனேஷியாவில் புதிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், திடீரென பெட்டிக்கடைகள் மீது கவனத்தைப் செலுத்துகின்றனர். சாலையோரங்களில் உறுத்தலாக இருக்கும் பெட்டிக்கடைகளையும், நவீனமயமாக்க முடியும் என்பது அவர்களது இலக்கு. முதலில், பெட்டிக்கடைகளின் தோற்றத்தை பிரகாசமான மஞ்சள் நிற இழைப் பெட்டிகளால் உருவாக்கினர். அடுத்து அதில் கச்சிதமான அலமாரிகள், எல்.இ.டி., விளக்குகள், ஒரு தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்பு போன்றவற்றை இணைத்தனர். பிறகு, ‘வை – பை’ வசதி, வாடிக்கையாளர்களுக்கு நிழல் அமைப்பு, இருக்கைகள், குளிர்பதன பெட்டி போன்றவற்றையும் தந்தனர். உடனே …