புதுடில்லி, ‘பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனத்தின் போது, திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி முறையில், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் போது, தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ என, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன.மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து, பொதுத் துறை நிறுவன செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது பல்கலை …

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உள்ள அமைதிப்படையில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் உள்ளனர். ஐ.நா.சபை அமைதிப் படையில் இப்போது 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் அமைதிப் படையினரில் 3,737 பேர் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். இவர்களில் இந்திய வீரர்கள்தான் அதிகம். இந்தியாவைச் சேர்ந்த 163 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஐ.நா.சபையின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

துாத்துக்குடி, துாத்துக்குடியில் மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர். கலவர சம்பவங்களின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான குழுவினர் சேகரித்துவருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் இன்னமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களுக்கு பின் விசாரணை வேகம் எடுக்கும்.

தாமரைப்பூ போலவே தாமரை தண்டும் மருத்துவ குணம் மிக்கது. இதனை தாமரைக்கிழங்கு என்றும் சொல்வர். கலோரிகள் மிகவும் அதிகம். நார்சத்து நிரம்பியவை. விட்டமின் சி, விட்டமின் பி 6, தாது உப்புகள் உள்ளன. தண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். இதயத்தை வலுவாக்கும். எந்த தாமரை, எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை. அதைப்போல் சமைக்கும் போது உப்பு போட்டாலும் தாமரைத்தண்டில் உப்பு ஏறுவதில்லை. காஷ்மீரில் தாமரைத்தண்டினை, ‘நந்த்ரு’என்பர். வதக்கல் மற்றும் பக்கோடா செய்வர். மூலநோயை குணப்படுத்த இலங்கையில் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு …

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. இந்த சட்டத்தால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளியை சேர்ந்த, பல் மருத்துவர் சவீதா, 2012ல் உயிரிழந்தார். ஓட்டெடுப்பு : இந்த சம்பவம், அயர்லாந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் பெரியளவில் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்றுவது தொடர்பாக, பொது ஓட்டெடுப்பு நடத்த, அயர்லாந்து அரசு முன்வந்தது. கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை வாபஸ் …

தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 ஆயிரம் கிலோவாக இருந்த உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 685 கிலோவாக குறைந்துள்ளது. உயர் விளைச்சல் ரகங்கள் பயன் படுத்தாதது, தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் கடைப்பிடிக்காதது, பூச்சி மற்றும் நோய்களுக்கு கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மகசூல் குறைவு காரணிகளாக உள்ளன. மகசூல் பெறுவது எப்படி நிலத்தை சமன்படுத்துதல், பார் – சால் அமைப்பு முறை, தரமான விதை தேர்வு, விதை அளவை …

கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் 33 சதவீத ஓட்டுகளை வாங்கியது. லீக் கட்சி 17 சதவீத வாக்குகளை வாங்கியது. கடந்த பத்து வாரங்களாக இருந்த நிச்சயமற்ற சூழல் ஒரு வழியாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் …

டோக்கியோ : ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு “யூபாரி’ முலாம்பழங்கள், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது. ஜப்பானின் யூபாரி நகரில் விளைவிக்கப்படும் முலாம்பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வகைப் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டி நடக்கும். யூபாரி நகரையொட்டிய சப்போரோவில் இரண்டு யூபாரி முலாம்பழங்கள் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த இரு பழங்களையும் வாங்குவதற்கு பலர் …

ஏமனில் மெகுனு சூறாவளி தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இதில் 3 பேர் இந்தியர்கள். ஆவர். மேலும் இந்தத் சூறாவளி தாக்குதலில் பலர் காணாமல் போகியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. மெகுனு சூறாவளி தொடர்பாக ஏமன் ஊடகங்கள், ”ஏமனின் தோபர் மற்றும் அல் வுஸ்தா ஆகிய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை மெகுனு சூறாவளி தாக்கியது.  சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் காற்று வீசியது. இந்த சூறாவளியில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியர்கள். மேலும் இந்த …