இந்­தி­யா­வில் முதன் முத­லாக, ‘பி.எம்.டபிள்யு., மினி கன்ட்­ரி­மேன்’ கார் தயா­ரிப்பை துவக்­கி­யுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின், தலை­வர் விக்­ரம் பவா, சென்னை அருகே, சிங்­க­பெ­ரு­மாள்­கோ­வி­லில் உள்ள தொழிற்­சா­லை­யில், கார் தயா­ரிப்பை சென்னை தொழிற்­சா­லை­யில், இரண்­டாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த, ‘மினி கன்ட்­ரி­மென்’ கார் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில், பி.எம்.டபிள்யு., வர­லாற்­றில், புதிய அத்­தி­யா­யம். கடந்த ஆண்டு, ‘மினி’ மாடல் கார் விற்­பனை, 17 சத­வீ­தம் உயர்ந்து, 421ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளோம். பெட்­ரோ­லில் இயங்­கும், ‘மினி கன்ட்­ரி­மேன்’, …

பேஸ்­புக் நிறு­வ­னம், இந்­தாண்டு பிப்­ர­வ­ரி­யில், ‘வாட்ஸ் ஆப் – பே’ என்ற பெய­ரில், சோதனை அடிப்­ப­டை­யில், பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்­கி­யது.10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், இச்­சே­வையை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து, அடுத்த வாரம், வாட்ஸ் ஆப் – பே நிறு­வ­னம், அதி­கா­ர­பூர்வ டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., மற்­றும் ஆக்­சிஸ் வங்­கி­க­ளு­டன், வாட்ஸ் ஆப் – பே ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.வாட்ஸ் ஆப் – பே வரு­கை­யால், ஏற்­க­னவே டிஜிட்­டல் …

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார். சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு …

சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ, தேவையான ஊக்கம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்,” என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். புதிய அறிவிப்புகள்: நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு, நான்கு கோடி ரூபாயில், புதிய மத்திய அலுவலகம் கட்டப்படும் சென்னை, மயிலாப்பூர், துணை மின் நிலைய வளாகத்தில், 16 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த கணினி மின் தடை நீக்கும் மையம், ‘ஸ்கேடா’ மையம், புதிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தலைமை பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் …

கணவாய் வழியே கருமேகங்கள் தென்மேற்குப் பருவமழை மேகங்களை, மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்துவிடுவதால், தமிழகம் மழை மறைவுப் பிரதேசம் ஆகிறது. எனினும் பாலக்காட்டு கணவாய் வழியே தப்பும் மேகங்கள் ஓரளவு மழையைத் தருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், 30 கி.மீ., முதல் 40 கி.மீ அகலத்தில் அமைந்த இந்தக் கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோவை மாவட்டத்தையும் இணைக்கிறது. கேரளாவின் முதன்மையான வழித்தடமாக இந்த கணவாய் உள்ளது. பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று …

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று முன்தினம் சோதனை முயற்சியாக 2 முறை இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கி வரும், ரிசர்ச் சென்டர் இமாரட்தான் (ஆர்சிஐ) இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் முதலில் தயாரித்த …

நியூயார்க் : உலகளவிலான அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது 96,000 வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் உள்ளனர். 15,000 அதிகாரிகளும், …

கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் இன்னும் 15 நாட்களுக்கு அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் நேற்று பெங்களூருவில் அம்மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குமாரசாமியின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் …

பூச்சிக் கொல்லி மருந்துகள், பயிர்களுக்கும், சூழலுக்கும் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பூச்சிகளுக்கு, பயிர்கள் இரையாகாமல் காப்பாற்ற, தடுப்பு மருந்தைப் போட முடியும் என, பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எல்லா தாவரங்களுக்கும், தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன், அவற்றின் மரபணுக்களிலேயே உண்டு. இயற்கை அளித்திருக்கும் இந்த திறனை மேலும் அதிகரித்தாலே, தாவரங் களால் பூச்சிகளை விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஹெல்சிங்கி பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இவர்கள் பிரஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி …

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி சார்பாக ‘கிம்போ’ எனும் மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, சுதேசி சம்ரிதி சிம் கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக சுதேசி மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தஜராவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுதேசி சிம்கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமார யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ எனும் மெசேஜிங் தளத்தை …