நேரம் மாறி வேலை செய்வதற்கும் மகப்பேறு பிரச்சனைகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட  ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு நேரப் பணி செய்யும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் 80 சதவிதம் கூடுதல் காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் இரவுப் பணி மட்டுமே செய்து வந்த பெண்களில் 29 சதவீதம் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அதே போல பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்யும் பெண்களில் 22 …

புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக  பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த புதிய ஆய்வு இதனைக் கண்டுபிடித்துள்ளது. 600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்டவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி. நீங்கியது. இந்த இருவரின் உடலிலிருந்து எச்.ஐ.வி. கிருமி நீங்கியது, இருந்தாலும் அவர்கள் ஆண்டி ரெட்ரோ வைரஸ் என்னும் மருந்தை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அமெரிக்க மருத்துவர்கள் அறிவிப்பு.

OESITY எனப்படும் மரபணு குறித்து லண்டன் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி – எப்டிஓ என்னும் மரபணு காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் என்றும்,  இந்த எப்டிஓ-வில் க்ரெலின் நொதிமம் உடல் பருமனை தூண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதிகளவில் மாசடைந்த வாயுக் காற்றை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து  நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு மனித கருவிலிருந்து எடுக்கப்பட்ட  குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.

சிறுநீர்பையில் தோன்றும் புற்றுநோயை அதன் வாசனையை வைத்து கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.

நீரழிவு நோயின் ஒரு வகையான முதல்ரக நீரழிவு நோயை மாற்றுவதற்கான நோய்த் தடுப்பு மருந்தின் மாதிரி பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

யோகாவின் நன்மைகள் பாடுவதிலும் உண்டு. ஒன்றாக சேர்ந்து பாடுவதென்பது யோகா பயிற்சி செய்வதற்கு ஒத்த நலன்களை மனித ஆரோக்கியத்துக்கு தருகிறது என சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்கள் கலந்து குழந்தை உருவாக்கும் நவின ஐவிஃஎப் முறைக்கு உலகில் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது.