பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதிர் முகமதுவை புத்ரஜெயாவில் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு கலாச்சார, வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மலேசியாவில் இருந்து நேற்று பிற்பகலில் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நேற்று மாலை நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்தனர். மாநாட்டில் இரு தலைவர்களும் உரையாற்றினர்.
No Comment