பினாகா ராக்கெட் சோதனை வெற்றி!!!


ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று முன்தினம் சோதனை முயற்சியாக 2 முறை இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கி வரும், ரிசர்ச் சென்டர் இமாரட்தான் (ஆர்சிஐ) இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் முதலில் தயாரித்த பினாகா ராக்கெட்டில் வழிகாட்டு வசதி இல்லை.

இப்போது வழிகாட்டு வசதிகள், கட்டுப்படுத்தும் அமைப்பு உட்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த ராக்கெட்டை ஆர்சிஐ தயாரித்துள்ளது. இதன்மூலம் இந்த ராக்கெட் துல்லியமாக செயல்படும். மேலும் இதற்கு முன்பு 40 கி.மீ. ஆக இருந்த இதன் செயல்திறன், இப்போது 70 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதன் மூலம், வழிகாட்டு முறைகள் இல்லாத ராக்கெட்டை மாற்றி அமைக்கும் தொழில்நுடபத் திறமை நம் நாட்டுக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். – பிடிஐ

Previous இந்தியர்களின் உயிர் தியாகம் முதலிடம் ஐ.நா. படையில் அறிவிப்பு!!
Next அறிவியலின் சிந்தனைகள்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *