சூரிய சக்தி மின் நிலையங்கள் நிறுவ அரசு உதவித்தொகை!!


சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ, தேவையான ஊக்கம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்,” என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள்:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு, நான்கு கோடி ரூபாயில், புதிய மத்திய அலுவலகம் கட்டப்படும்

  1. சென்னை, மயிலாப்பூர், துணை மின் நிலைய வளாகத்தில், 16 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த கணினி மின் தடை நீக்கும் மையம், ‘ஸ்கேடா’ மையம், புதிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தலைமை பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் கட்டப்படும்கோவை, ஈரோடு மண்டலத்திற்கு, 1,000; பிற மண்டலங்களுக்கு, 1,000 என, கள உதவியாளர்கள், வெளிப்படையான எழுத்து தேர்வு வாயிலாக, நியமனம் செய்யப்படுவர்
  2. மின் வாரியத்திற்கு, 150 மின்னியல் உதவி பொறியாளர்கள்; 25 சிவில் உதவி பொறியாளர்கள்; 25 இயந்திரவியல் உதவி பொறியாளர்கள்; 250 இளநிலை கணக்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்
  3. சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிப்பதற்காக, 4.31 கோடி ரூபாய் செலவில், ‘மேற்பார்வை பொறியாளர் – சென்னை வளர்ச்சி வட்டம்’ என்ற, பிரிவு உருவாக்கப்படும்
  4. அதிக மின் பகிர்மான கட்டமைப்பை கொண்டுள்ள, உதகமண்டலம் கோட்டத்தை, இரண்டாக பிரித்து, கூடலுாரில், 1.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மின் பகிர்மான கோட்டம் அமைக்கப்படும்
  5. தாம்பரம் மின் பகிர்மான கோட்டத்தை இரண்டாக பிரித்து, பல்லாவரம் கோட்டம் அமைக்கப்படும்
  6. பழைய நீர் மின் நிலையங்களின் ஆயுள்காலத்தை, மேலும், 25 ஆண்டுகள் நீட்டித்து, நிறுவு திறனை மேம்படுத்த, 1.75 கோடி ரூபாய் செலவில், கோட்டங்கள் மற்றும் உபகோட்டங்கள் உருவாக்கப்படும்
  7. குறைந்தபட்சம், 20 மெகாவாட் நிறுவு திறனில், கிராமப்புற சூரியசக்தி பூங்கா அமைக்கும் திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு, 1 ஏக்கருக்கு ஆண்டு தோறும், 10 ஆயிரம் ரூபாய் வீதம் வருவாய் கிடைக்கும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வருமானம் கிடைப்பதற்காக, ஒரு மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ, தேவையான ஊக்கம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்
  8. விவசாயிகள், தங்கள் சொந்த நிலத்தில், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து, அதை தங்கள் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கும், மற்றவர்களுக்கும் விற்பனை செய்ய, உதவிகள் வழங்கப்படும்.
Previous அறிவியலின் சிந்தனைகள்!!!
Next மலேசியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு !!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *