சுதேசி சிம்கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமார யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ எனும் மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக ‘கிம்போ’ இனி இருக்கும். இதைக் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
‘கிம்போ’ என்பது சமஸ்கிருத வார்த்தை. எப்படி இருக்கிறீர்கள், புதிதாக என்ன இருக்கிறது என்பதன் சுருக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் போலவே, ‘கிம்போ’ செயலியும் செயல்படும். ஒரு நபருக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம், புதிதாக குரூப்களை உருவாக்கி செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இது தவிர பிராட்காஸ்ட் லிஸ்ட், ட்விட்டர் போல புகழ்பெற்றவர்களை பின் தொடர்தல், இலவசமாக வீடியோ காலிங், போன் காலிங் செய்தல் போன்றவை செய்ய முடியும்.
மேலும் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கிஸ், லொகேஷன், ஜிப், டூடிள் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
முன்னதாக, கடந்த 27-ம் தேதி பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் இணைந்து, பதஞ்சலி நிறுவனம் ஸ்வதேசி சம்ரிதி சிம்கார்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பதஞ்சலி நிறுவனத்தின் ‘கிம்போ’ செயலியை ஆர்வத்துடன் மக்கள் பதவிறக்கம் செய்துவந்த நிலையில், இன்று காலை முதல் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து அந்தச் செயலி நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆப்பிள் ஐ ஸ்டோரில் மட்டும் ‘கிம்போ’ நீக்கப்படவில்லை.
இது குறித்து சைபர்மீடியா ரிசார்ச் நிறுவனத்தின் தலைவர் பைசல் கவூசா கூறுகையில், உலகளவில் வாட்ஸ்அப் மிகப்பெரிய இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக ‘கிம்போ’ வருவது என்பது சாதாரண காரியமல்ல. ஸ்வதேசி என்ற பெயரில் மட்டும் வந்து வாட்ஸ்அப்பை முறியடித்துவிட முடியாது.
இதுவரை 5 ஆயிரம்பேர் மட்டுமே கிம்போவை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால், பலரும் கிம்போவில் பல்வேறு சிக்கல்கள், பயன்படுத்துவதில் கோளாறு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
No Comment