துாத்துக்குடி, துாத்துக்குடியில் மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர்.
கலவர சம்பவங்களின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான குழுவினர் சேகரித்துவருகின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் இன்னமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களுக்கு பின் விசாரணை வேகம் எடுக்கும்.
No Comment