புதுடில்லி, ‘பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனத்தின் போது, திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி முறையில், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் போது, தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ என, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன.மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து, பொதுத் துறை நிறுவன செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது
பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதியை பெறுகின்றனர். எனவே, ஆட்சேர்ப்பின் போது அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No Comment