டோக்கியோ : ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு “யூபாரி’ முலாம்பழங்கள், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது.
ஜப்பானின் யூபாரி நகரில் விளைவிக்கப்படும் முலாம்பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வகைப் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டி நடக்கும். யூபாரி நகரையொட்டிய சப்போரோவில் இரண்டு யூபாரி முலாம்பழங்கள் ஏலத்துக்கு விடப்பட்டது.
இந்த இரு பழங்களையும் வாங்குவதற்கு பலர் போட்டியிட்ட நிலையில், அதிகப்பட்சமாக ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது. இது, யூபாரி முலாம்பழங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிகவும் கூடுதல் விலையாகும்.
No Comment