அயர்லாந்தில், கருக்கலைப்புக்கு விதிக்கப்படும் தடை ரத்து!!


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. இந்த சட்டத்தால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளியை சேர்ந்த, பல் மருத்துவர் சவீதா, 2012ல் உயிரிழந்தார்.

ஓட்டெடுப்பு :

இந்த சம்பவம், அயர்லாந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் பெரியளவில் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்றுவது தொடர்பாக, பொது ஓட்டெடுப்பு நடத்த, அயர்லாந்து அரசு முன்வந்தது.

கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக, 6,500 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன; 60.52 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், கருக்கலைப்பு மீதான தடையை நீக்குவது தொடர்பான ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிவில், 66 சதவீதம் பேர், தடையை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து ஓட்டளித்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அயர்லாந்து பிரதமர், லியோ வராத்கர், 39, கூறியதாவது: அயர்லாந்து நாட்டுக்கு, இன்று, வரலாற்று சிறப்பு வாய்ந்த தினம். நாட்டில், ஓர் அமைதி புரட்சி நிகழ்ந்துள்ளது. நாம் அனைவரும், பொறுப்புள்ள மக்களாக, தற்போது பேசியுள்ளோம்; பெண்கள் மீது, நாம், நம்பிக்கை வைத்துள்ளோம்; அவர்களையும், அவர்களின் முடிவுகளையும் மதிக்கிறோம்.

Previous கடலையில் லாபம்!!!
Next ரயில்வே துறையில் 9,739 பணியிடங்கள்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *