வேளாண் கடன் வங்கிகள் வழங்கப்படுகிறதா? ஆர்பிஐ அறிக்கை தாக்கல்!!!


இந்தியாவிலேயே மேகாலயா மாநிலத்தில் மட்டும்தான் 93.6% வேளாண் கடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறது. மற்ற மாநிலங்களில், சிக்கிம் உட்பட சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன் விகிதாச்சாரம் 1.67% என்று அதலபாதாளத்தில் உள்ளது. எனவே வேளாண் கடன் வழங்குதலில் முறையான திட்டமிடல் அவசியம் என்றும், யாருக்குத் தேவை உள்ளதோ அவர்களுக்குத்தான் கடன் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டியுள்ளது.

வழங்கப்படும் வேளாண் கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெறுவது சொற்பம்தான், சில வேளைகளில் இவர்கள் பெறுவதேயில்லை. இந்தத் துறைக்கான கடன் வழங்குதலில் 30-40% தான் சிறு விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம் என்கிறார் இந்திய வேளாண் புள்ளிவிவர அமைப்பின் நிபுணர் பரத் ராமசுவாமி, கூறும்போது, “வேளாண் கடன்கள் சம அளவில் விநியோகிக்கப்படுவதில்லை. ஒன்று பெரிய விவசாயிகள், நகரத்திற்கு நெருக்கமாக உள்ள விவசாயிகள் ஆகியோர் கடன் விநியோகத்தில் பயனடைந்துள்ளனர். எனவே முன்னுரிமை துறையின் கடன் அளிப்பு கட்டாயங்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட வகையான விவசாயியை கடன்கள் சென்றடைவதில்லை. இந்தத் திட்டமே சரியாக இலக்கு நோக்கி செலுத்தப்படவில்லை” என்கிறார்.

ஆர்பிஐ விதிகள்:

ஆர்பிஐ விதிகளின் படி சரிகட்டப்பட்ட நிகர வங்கிக் கடனில் 18% வேளாண் துறைக்குச் செல்ல வேண்டும். 8% கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். வங்கித்துறைகள் இந்த வரம்பை எட்டிவிட்டாலும் போய்ச்சேர வேண்டியவர்களுக்கு, தேவை உள்ளவர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் துறைக்கான கட்டாயங்கள் இருக்கின்றன, விதிமுறைகள் இருக்கின்றன என்று கூறும் ராமசுவாமி, “இந்தக் கட்டாயங்கள் இல்லையெனில் வேளாண் துறைக்கு இவ்வளவு கடன்கள் வழங்கப்பட முடியாது. எனவே இந்தத் துறைக்கு கடன் வழங்குதலில் செலவினங்கள் உள்ளன. எனவேதான் இந்த செலவினங்களினால் இந்தத் துறைக்கென சில கடன் வழங்கும் கட்டாயங்கள் இல்லையெனில் இந்தத் துறைக்கு இவ்வளவு கடன்கள் அதாவது மத்திய அரசு விருப்பப்படும் அளவுக்கு வழங்க முடியாது” என்கிறார்.

ஆர்பிஐ தரவுகளும் இவர் கூறுவதற்கு சாதகமாகவே உள்ளன. 2017 நிலவரப்படி ஊரக விவசாயக் கடன் நிலுவை 34.5% ஆக உள்ளது. மற்ற கடன் தொகைகள் நகர்ப்புற, புறநகர், மெட்ரோபாலிட்டன் விவசாயிகளுக்குச் சென்றுள்ளது.

“முன்னுரிமைத் துறையின் கடன் வழங்குவதற்கென உள்ள கட்டாயங்கள் இல்லாமலேயே இவர்கள் கடன் பெற முடிகிறது” என்கிறார் மீண்டும் ராமசுவாமி. ஆகவே கடன் வழங்க முன்னுரிமை பெற்றுள்ள துறைகளின் கடன் வழங்கு நடைமுறைகளை தீவிர ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது என்றும் தீர்வு சொல்கிறார்.

வேளாண் கடன் வழங்கும் சுமை பொதுத்துறை வங்கிகள் மீதுதான் உள்ளது, 23 தனியார்த்துறை வங்கிகளில் 12 வங்கிகள் இந்தத் துறைக்கு வழங்க வேண்டிய 18% கடன் இலக்கை எட்டவில்லை என்கிறது ஆர்பிஐ அறிக்கை.

 

Previous 100-வது நாள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு,தீவைப்பு வன்முறை !!!
Next பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், சிவகங்கை மாவட்டம் முதலிடம்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *