சவுத் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!!!


இவ்வங்கியில் 150 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 2017 டிச., 31 அடிப்படையில் 25 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர் 1993 ஜன., 1 முதல் 1998 டிச., 31க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

புரொபேஷன் காலம்: இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இரண்டு வருட காலத்திற்கு புரொபேஷன் அடிப்படையில், இந்தியாவின் எந்த பகுதியிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800.

கடைசி நாள்: 2018 மே 25.

விபரங்களுக்கு : www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=157

Previous பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், சிவகங்கை மாவட்டம் முதலிடம்!!!
Next கடலோரக் காவல் படையில் பணிவாய்ப்பு!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *