விண்ணில் செலுத்தப்பட்டது சீனாவின் கியூகியோ செயற்கைக்கோள்!!


நிலவின் மர்மமான பக்கக்கங்களை ஆராய்ந்து பூமிக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கும் செயற்கைக் கோள் ஒன்றை சீனா இன்று வெற்றிகரமாக செலுத்தியுள்ளது, இது மாபெரும் லட்சிய இலக்கின் ஒரு பகுதியாகும்.

இச்செயற்கைக் கோளுக்கு கியூகியோ (மக்பீ பாலம்), என்று பெயரிடப்பட்டுள்ளது. 400 கிலோ கொண்ட இச்செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  சீனாவில் அமைந்துள்ள சிசாங் செயற்கைக்கோள் விண்வெளி மையத்திலிருந்து, (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5:28க்கு,  லாங்மார்ச்  4சி ராக்கெட் ஒன்று செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு விண்ணில் பாய்ந்ததாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்ட மேலாளர் ஸாங் லிகுவா தெரிவிக்கையில், நிலவின் மறுபக்கம் மென்மையான நிலம் என்று கூறப்படுகிறது. அப் பக்கத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு முக்கிய அடியை சீனா இன்று எடுத்துவைக்கிறது. அதற்கான ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல் நாடாக சீனா திகழ்கிறது” என்றார்.

ஏறக்குறைய 25 நிமிடங்கள் கழித்து, ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து, 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூமி-நிலவு மாறும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அங்கிருந்து அந்த செயற்கைக்கோள் உச்சத்தைத் தொட வேண்டிய தூரம் 4,00,000 கிலோமீட்டர் தொலைவு ஆகும். சூரிய மின்சக்தி பேனல்களும் தகவல்தொடர்பு ஆண்டெனாக்களும் அங்கிருந்து பிரிந்தன.

பூமி-நிலவின் (எல்2) எனப்படும் இரண்டாவது லாக்ராங்கியனைச் சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டச் சுற்றுப்பாதையில் கியூகியோ செயற்கைக்கோள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியிலிருந்து 4,55,000 கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

இச்சுற்றுப்பாதையில் செல்லும் உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக கியூகியோ அமைந்திருக்கம் என சீனாவின் சினுவா செய்தி  நிறுவனம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து சீன விண்வெளி தொழில்நுட்ப அகாடெமியின் துணை தலைமை பொறியாளர் சென் ஸாங் கூறுகையில், இச்செயற்கைக்கோள் பல்வேறு ஆண்டெனாக்களை சுமந்துசெல்கிறது. இதில் ஒன்று, விண்வெளியில் எப்போதும் ஆய்வுசெய்யத்தகுந்த மிகப்பெரிய தகவல்தொடர்பு ஆண்டெனா. இது குடைபோன்ற வடிவம் கொண்டது. இது 5 மீ சற்றளவு கொண்டது.

பூமி நிலவு அமைப்பின் எல்2 இடத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை ஒளிவட்டத்தில் இந்த செயற்கைக்கோள் ஒப்பீட்டளவில் சிறியஅளவிலான எரிபொருளுடனேயே சென்று தங்கியிருக்க முடியும். அதற்கு நிலவின் ஈர்ப்புச் சமநிலைக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் நிலவின் இந்த செயற்கைக்கோள் திட்டம் சுற்றுப்பாதையில் நிலவுக்கு அருகே சென்று நிறுத்தப்பட ஏதுவாக பல தொழில்நுட்ப அனுசரிப்புகள் உள்ளிட்ட சவால்களை கடந்து வந்திருக்கிறது. நிலவு ஈர்ப்பும் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

சீன நாட்டுப்புறக் கதை ஒன்றில், சந்திர நாட்காட்டியின்படி ஏழாவது மாதம் ஏழாவது இரவில் மாக்பீஸ் எனும் பறவை ஒரு பாலம் அமைக்கிறது. அதற்கு உதவுவதற்காக, சொர்க்க தெய்வத்தின் ஏழாவது மகளான ஒரு நெசவு நெய்யும் பெண்ணான ஷீ நியூ முயல்கிறாள். இதற்காக அவள் பெரிதும் நேசிக்கும் தனது மாடு மேய்க்கும் குல கணவனான நியூ லாங்கைச் சந்திக்கிறாள். பால்வெளி மூலம் இருவரும் பிரிக்கப்பட்டு விடுகின்றனர்.

கியீகியாவோ செயற்கைக்கோள் பூமியின் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் நிலவின் மறுபக்கத்திற்கும் ஒரு பாலத்தை அமைத்துத்தரும் என்று சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் கடைசியில் நிலவின் மறுபக்க ஆய்வு தொடங்கப்படும் எனற எதிர்பார்க்கப்படுகிறது.

Previous முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு!!
Next கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *