மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’ ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம்.
மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா எடுத்துள்ளது. என்றாலும் பறவைப் பார்வையில் செவ்வாயின் மேற்பரப்புகளை படம்பிடித்து ஆராய்வதன் மூலம், அக்கிரகத்தைப் பற்றி நமக்கு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என, நாசா நம்புகிறது.
No Comment