கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தண்ணீர் பயன்படுத்த அவசியம் இல்லாத சிறுநீர் கழிக்கும் யூரினல் கோப்பைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கு ‘சன்மிங்க்’ என்று பெயர். ஒரு முறை நிறுவி விட்டால், இந்தக் கோப்பை 10 ஆண்டுகளுக்கு மாறாத தன்மை கொண்டது. இந்தக் கோப்பைகளின் மேலே கண்ணாடிப் பதத்தில் உள்ள, சில்வர் குளோரைடு முலாம் பூசப்பட்டுள்ளது. இதில் கெடுதல் விளைவிக்கக்கூடிய நுண்கிருமிகளும், நாற்றமும் பரவாது. பராமரிக்க ஆட்கள் தேவையில்லை. தண்ணீரும் தேவையில்லை. வாசனை திரவியங்களையும் பயன்படுத்த அவசியம் இல்லை.
மங்களூரு என்ற பெயரில் கர்நாடகா சட்டசபை தொகுதி உள்ளது. அரபிக்கடலுக்கும் – மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே கர்நாடகாவின் மங்களூரு உள்ளது. இது, ‘கர்நாடகத்தின் நுழைவாயில்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. மங்களாதேவி என்னும் தெய்வத்தின் பெயரில் மங்களூரு நகரம் உள்ளது. கன்னடத்தில் இது ‘மங்களூரூ’என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. துளு மொழியில் ‘குட்லர்’ என்றும், கொங்கணியில் ‘குடிலர்’ என்றும் இது அழைக்கப் படுகிறது. துறைமுக நகரான மங்களூரு, ஒரு காலத்தில் ஓய்வில்லாத துறைமுக நகராக இருந்துள்ளது. ‘தட்சிண கன்னடா’ என்ற சிறப்பு பெயரை இந்நகரம் பெற்றுள்ளது.
No Comment