6 லட்சத்திற்கு 600 மூட்டை நிலக்கடலை ஏலம்!!!


சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 600 மூட்டை நிலக்கடலை 6 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.சேலம் பள்ளப்பட்டி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் மற்றும் நிலக்கடலை ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 600 மூட்டை நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர். நிலக்கடலைக்கு அதிகபட்ச விலையாக மூட்டைக்கு(60 கிலோ) 2,305 மற்றும் குறைந்தபட்ச விலையாக 1,540 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிகபட்ச விலையாக ஒரு கிலோவிற்கு 38.50 மற்றும் குறைந்தபட்ச விலையாக 25.50 நிர்ணயிக்கப்பட்டது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயோத்தியா பட்டணம், பனமரத்துப்பட்டி, பாப்பாரப்பட்டி, வீரபாண்டி, ஓமலூர், மல்லூர், ஆட்டையாம்பட்டி, அரியானூர், சேசன்சாவடியை சேர்ந்த 86 விவசாயிகள் கொண்டு வந்த நிலக்கடலை 6 லட்சத்துக்கு ஏலம் போனது. இதில், சேலம், ராசிபுரம், கொங்கணாபுரம், ஓமலூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு நிலக்கடலையை ஏலம் எடுத்தனர்.

Previous வெண்டைக்காய் விலை சரிவு!!!
Next கூகுள் நிருவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *