சிறுதானியங்கள்


சிறுதானியங்கள்  என்னென்ன உள்ளது என்று கேட்டால் பொதுவாக சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் போன்ற பதில் வரும். இன்னும் கொஞ்சம் அதிகம் தெரிந்தவர்கள் “காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்கு”ன்னு சொல்வாங்க.

“நெல்லில் இருப்பதுபோல் சிறுதானியங்களில் ரகங்கள் எதாவது உள்ளதா?” என்று கேட்டால் பலவிதமான பதில் கிடைக்கிறது. முழுமையான பதில் எங்கேயும் கிடைக்கவில்லை.

ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலை என்று கொஞ்சம் சுற்றியபோது  பல விடயங்கள் தெரியவந்தது.

சாமை, தினை, கம்புனு எதனை எடுத்தாலும் பல ரகங்கள் இருந்துள்ளது.

நெல்லை பிரித்துப் பார்த்த நாம் சிறுதானியங்களை பிரித்துப் பார்க்க தவறிவிட்டோமா ? அரிசி ரகங்களைப் பொருத்து பலன்கள் மாறுவதுபோல சிறுதானியமும் “ரகங்களால்” பலன்கள் மாறவேண்டும் அல்லவா ?

சிறுதானியங்களின் உட்பிரிவுகள் பற்றி விவரங்கள் அதிகமாக பேசப்படுவதில்லை.

எனக்கு கிடைத்த சில வகைகளின் பெயர்கள் :

சாமை _(Little Millet)

மல்லியச்சாமை
பெருஞ்சாமை
வெள்ளைப்பெருஞ்சாமை
வெள்ள சாமை
கட்டவெட்டிச் சாமை
திருகுலாசாமை
சடஞ்சாமை
கருஞ்சாமை
செஞ்சாமை,
சிட்டஞ்சாமை
பில்லுசாமை

தினை_(Italian Millet or Foxtail Millet)

கென்டி தினை
செந்தினை
மரதினை
பாலாந்தினை
வெள்ளை தினை
கோராந்தினை
கில்லாந்தினை
பெருந்தினை
மூக்காந்தினை
கருந்தினை
பைந்தினை
சிறுதினை
யாடியூரு தினை
மாப்பு தினை
நாட்டுதினை

வரகு_(Kodo Millet)

திரிவரகு
புறவரகு

கேழ்வரகு_(Finger Millet)

சாட்டைக் கேழ்வரகு
காரக் கேழ்வரகு
கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு
சுருட்டைக் கேழ்வரகு
அரிசிக்கேழ்வரகு
கருமுழியான் கேழ்வரகு
ஜாகலூரு கேழ்வரகுuyirnaadi-siruthaniyam-001
முட்டை கேழ்வரகு
மலளி கேழ்வரகு
பில்லிமண்டுகா கேழ்வரகு
பிச்சாகாடி கேழ்வரகு
நாகமலா கேழ்வரகு

சோளம்_(Great Millet or Sorghum)

செஞ்சோளம்
கருஞ்சோளம் (இருங்கு சோளம் )
வெள்ளைச்சோளம்

இன்னும் பல வகைகளின் பெயர்களைக் கூட தவறவிட்டுவிட்டோம்.

கம்பும் , கேழ்வரகும் இது போன்று சிறுதானியங்கள் பயிரிடுவதால் அடுத்து நாம் செய்யும் மணி சத்து கரைத்து அடுத்த பயிருக்கு கொடுப்பதால் வேர்க்கடலை போன்ற பயிருக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும்

 

வரகு பயிரிடும் முறை

கோ 3, ஏ.பி.கே 1 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்த பின், விதைப்பு செய்ய வேண்டும். கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.

வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் *10 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும். தொழு உரத்துடன் 10 பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலங்கள் பாஸ்ப்போபாக்டீரியா ஆகிய நன்மை தரும் உயிர் உரங்களை சேர்த்து இடலாம்.

ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் மணிச்சத்துக்களை இட வேண்டும். பயிர் விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 40 நாள் ஒரு முறையும் கைக் களை எடுக்க வேண்டும்.

களை எடுத்தவுடன் வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் மற்றும் செடிக்கு செடி 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பயிர்களை களைக்க வேண்டும். விதையின் மூலம் கதிர்கரிப்பூர்டை நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசெப் (அ) குளோரோதலோனிலை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு ரகமான கோ 3ஐ பயிரிடலாம். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து தானியங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு இவற்றை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.

கீழ்கண்ட சிறுதானியங்கள்  எவ்வளவு அடி உயரம் வளரும்?uyirnaadi-siruthaniyam-002

சாமை, தினை,குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம்.

ராகி, திணை, சாமை   3-4  அடி  வளரும்

குதிரைவாலி நடுத்தர உயரம் 4-5 அடி உயரம் வளரும்.

வரகு 2.5 அடி உயரம் வளரும்.

கம்பு,சோளம் 6-7  அடி வளரும். மேலும் ரகம் பொறுத்து மாறுபடும்

 

 

 

 

ஸ்ரீதர் அவர்களின் கம்பு பற்றிய ஆலோசனை

கார்த்திக் அவர்களின் கேழ்வரகு பற்றிய ஆலோசனை

மாதவன் அவர்களின் கம்பு பற்றிய ஆலோசனை

தெள்ளார் ஸ்ரீனிவாசன் அவர்களின் கேழ்வரகு பற்றிய ஆலோசனை

Previous மீண்டும் ‘போக்சோ’ சட்டம் சிறுமிகளை பாலியல் செய்தால் மரண தண்டனை:
Next மாடி வீட்டுத் தோட்டத்தில் கீரைச் செடி வளர்ப்பு??

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *