உண்ணும் உணவை சரிபார்க்கும்  பல்லில் ஓர் உணரி!


உடல் எடையை குறைக்கவும், வேறு உடல்நல குறைபாடுகளை கண்டறியவும், நோயாளி
என்ன சாப்பிடுகிறார் என்பதை கண்காணிப்பது அவசியம். இதற்கு ஒரு புதிய
கண்டுபிடிப்பு உதவக்கூடும்.
அமெரிக்காவிலுள்ள டப்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, 2 சதுர
மி.மீ., அளவே உள்ள ஒரு மின்னணு உணரியை, பல்லில் ஒட்டிக்கொண்டால் போதும்.
அந்த சில்லு, நோயாளி உட்கொண்ட குளூகோஸ், உப்பு மற்றும் மதுவின் அளவை,
துல்லியமாக பதிவு செய்துவிடுகிறது.
ஒரு சிறிய மொபைல் கருவி ரேடியோ அலைவரிசையை அனுப்ப, அதை உள்வாங்கும் உணரி,
திரும்பவும் சில ரேடியோ அலைவரிசையை அனுப்புகிறது.
ஆனால் திருப்பி அனுப்பும் போது, உணரியின் நடுப்பகுதியில் உள்ள உயிரி உணர்
படலத்தில் ஏற்பட்டுள்ள வேதி மாற்றத்திற்கு ஏற்ப, அந்த அலைவரிசையில் சில
மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றத்தை வைத்து, நோயாளி என்ன சாப்பிட்டார்,
எவ்வளவு உள்ளே போனது என்பதை, மொபைல் கருவி கணக்கிடுகிறது.
இந்த நுண் உணரியிலுள்ள உயிரி உணர் படலத்தால் தற்போது குளூகோஸ், உப்பு,
மது பானம் ஆகிய மூன்று வகை பொருள்களைத் தான் உணர முடியும். என்றாலும்,
விரைவில் பலவித உணவுப் பொருட்களையும் பகுத்தறியும் திறனையும், தங்கள்
உணரிக்கு கொண்டுவர முடியும் என, அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தங்கள்
ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்து உள்ளனர்.
உணவுக் கட்டுப்பாடு என்ற சவாலான பிரச்னைக்கு, பல்லில் ஒட்டும் சில்லு,
ஓர் அருமையான தீர்வு.

Previous கரும்பலகை,சுவரில்  எழுதும் ரோபோ!!!!!!
Next குழந்தைகள் விளையாடும் பொம்மையில் உருவாகும் கிருமிகள்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *