மின்னணு பணப்பரிவர்த்தனை  காரணமாக அதிகரித்துள்ள திறன்பேசி விற்பனை..!


சமீபகாலமாக கணிசமானோர் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருவதால், 2018-ஆம் ஆண்டு உலகில் நடைபெறும் மொத்த திறன்பேசி விற்பனையில்  62 சதவீதம் இந்தியர்களின் பங்களிப்பு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வேகமான  இணைய  சேவை  மற்றும்  ஊக்குவிக்கப்படும் மின்னணு பணப்பரிவர்த்தனை காரணமாக  திறன்பேசிகள்  வாங்கும்  இந்தியர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் திறன்பேசி மின்னணு பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேக பணப்பரிவர்த்தனை செயலிகளை உருவாக்கி வருவது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சீனத் திறன்பேசிகளின் ஆதிக்கம் இந்தியாவின் உள்ளூர் திறன்பேசி நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற நிறுவனங்களை மட்டுமல்லாது இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்தையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

எனவே சாம்சங், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் விற்பனையை அதிகரிக்க பிரத்யேக திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்தியாவில் திறன்பேசி விற்பனை அதிகரிப்பதால், சீன நிறுவனங்களான ஜியோமி, ஓப்போ, ஹுவாய், லெனோவோ போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் அதிக தொகையை முதலீடு செய்ய தயாராக உள்ளன.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/smartphone-sales-in-india-boosted-because-of-adoption-of-digital-payments-372849.html

Previous கடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள்  50 சதவீதமாக  அதிகரிப்பு..!
Next போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *