கணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..!


கணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக மாற்றும் புதிய கருவியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியின் மூலம் கணினியை அதிகப்படியான வெப்பநிலையிலும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். கணினித்துறையில் தற்போதைக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சனை, கணினிகள் எப்போதும் குளிர்ச்சியான சூழலில் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரங்களினால், செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த கருவி மூலம் கணினியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

”நீங்கள் மின்சாரத்தை வைத்து தற்போது என்னென்ன செய்து வருகிறீர்களோ. அதனை வெப்பத்தின் மூலமாகவும் செய்ய முடியும். ஏனெனில் அவற்றின் செயல்பாடுகள் பல இடங்களில் ஒத்துப் போகின்றன. இவை இரண்டும் ஆற்றலை எடுத்துச் செல்பவை. உங்களால் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால், அந்த வெப்பத்தைக் கொண்டு கணினியையும் இயக்க முடியும். இதனால் கணினி அதிக வெப்பமாவதும் தடுக்கப்படும்.” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த கருவி 630 டிகிரி பாரன்ஹுட் வெப்பநிலையில் செயல்படும். அதிகபட்சமாக 1,300 டிகிரி பாரன்ஹீட் வரை இந்த கருவி தாக்குபிடிக்கும். ”நாங்கள் அடிப்படையில் வெப்பக் கணினியை உருவாக்கி வருகிறோம். இது விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும். மேலும் எண்ணெய் அகழ்வாராய்ச்சி போன்றவற்றிலும் இதனை பயன்படுத்த முடியும். இதற்கு முன்னர் நாம் எந்த இடங்களில் கணினியை பயன்படுத்த சாத்தியமில்லாமல் இருந்ததோ, அந்த இடங்களில் இந்த தெர்மல் கணினி இயங்கும்.” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கணினிகளிலிருந்து வெளியாகும் வெப்பத்தில் 60 சதவீதம் வீணாக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற வீணாகும் வெப்பத்தை, மாற்று சக்தியாக மாற்றினால், மின்சாரம் போன்ற ஆற்றல்களை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் குறையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கருவியின் திறனை மேலும் அதிகரிக்கவும், மேலதிக வெப்பநிலையில் செயல்படும் வகையில் இதன் திறனை மேம்படுத்தவும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். “கூடிய விரைவில் நாங்கள் தெர்மல் கணினியை உருவாக்குவோம். அதன் மூலம் அண்டவெளியில் இதுவரை யாரும் அறிந்திராத பல ரகசியங்களை வெளிக்கொணர்வோம்.” என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/this-new-device-can-convert-heat-wasted-from-computers-into-alternative-source-of-energy-372531.html

Previous மங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..!
Next இந்தியாவிலேயே சிறந்த இணைய வசதியை பெற்றிருப்பது டெல்லி தானாம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *