360 டிகிரி வீடியோவாக ஒளிபரப்பு செய்ய உள்ள நாசா..!


சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல, அவ்வப்போது சரக்கு விண்கலன்களை நாசா விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்த வரிசையில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி  ’சிக்னஸ் ஆர்பிட்டல் ஏ.டி.கே சைக்னஸ்’  என்ற சரக்கு விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா ஏவ உள்ளது.

இந்நிலையில் இந்த விண்கலம் ஏவப்படும் நிகழ்வை 360 டிகிரி கோண வீடியோவாக ஒளிப்பதிவு செய்து, அதனை தனது யூ டியூப் கணக்கில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது நாசா. விண்கலம் பூமியிலிருந்து ஏவப்பட்டதிலிருந்து, அடுத்த 10 நிமிடங்களுக்கான வீடியோ காட்சிகள் நேரலையாக யு டியூபில் ஒளிபரப்பப்படும்.

அமெரிக்க நேரப்படி காலை 11.11 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. இந்த 360 டிகிரி கோண வீடியோ மூலம், விண்கலம் ஏவப்படும் நிகழ்வை அனைத்து பக்கங்களிலிருந்தும் பார்க்க முடியும்.

குரோம், ஃபயர் பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இணைய  உலவிகள் மூலமாக மட்டுமே இந்த வீடியோவை காண முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டி கருவி வைத்திருப்பர்கள், விண்கலம் ஏவப்படுவதை நேரில் இருந்து பார்த்த அனுபவத்தை இந்த வீடியோ மூலம் பெற முடியும் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:www.nasa.gov

Previous சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்..!
Next சாம்சங் நிறுவனத்தின் புதிய இரண்டு திறன்பேசிகள் நாளை மறுநாள் அறிமுகம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *