சைபர் தாக்குதல் குறித்து மக்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு..!


தொழில்நுட்ப வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறதோ, அதே அளவு சில பாதகங்களையும் அளித்து வருகிறது. குறிப்பாக  சமீபகாலங்களில்  சைபர் தாக்குதல் என்ற பிரச்சனை உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர் ஸ்கை நிறுவனம், சமீப காலமாக மக்களிடையே சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ”கடந்தாண்டின் இரண்டாம் பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு குறிப்பிடத்தகுந்த அளவு மக்களிடையே வளர்ந்துள்ளது. இருப்பினும் சில நடவடிக்கைகள் மூலம் சைபர்  தாக்குதல்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை எங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.” என காஸ்பர் ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் புள்ளி விபரங்களின்படி, 2016-ஆம் ஆண்டின் முதல் பகுதியில், சுமார்  79 சதவீத மக்கள், தாங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக மாட்டோம் என நம்பி வந்தனர். ஆனால் 2016-ஆம் ஆண்டின் இரண்டாம் பாகத்தில் அந்த சதவீதம் 74 -ஆக குறைந்துள்ளது.

தங்களுடைய மின்னணு சாதனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உள்ளீடு செய்யாதவர்கள் கடந்தாண்டு  39 சதவீதமாக இருந்தனர். அவர்களில் 29 சதவீதம் பேர் ,தற்போது சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மால் வேர் எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 22 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக  குறைந்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலால் ஒருவர் இழக்கும் பண மதிப்பின் அளவானது 121 அமெரிக்கா டாலரிலிருந்து 92 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

Previous சாம்சங் நிறுவனத்தின் புதிய இரண்டு திறன்பேசிகள் நாளை மறுநாள் அறிமுகம்..!
Next 30 ஜி.பி இலவச டேட்டா தரும் ஏர்டெல்லின் புதிய சலுகை..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *