இனி என்னாப்பு மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்..!


என்னாப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண்டறியும் எந்த வசதியும் முதலில் ஒரு குறிப்பிட்ட திறன் பேசிகளில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முதற்கட்டமாக பீட்டா பதிப்பு வெளியிடப்படுகிறது. பீட்டா பதிப்பில் இந்த வசதிகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே,  மற்ற திறன்பேசிகளுக்கு தனது வசதியை என்னாப்பு நிறுவனம் விரிவுபடுத்துகிறது.

இந்நிலையில் என்னாப்பு மூலம் பேசிக்கொள்ளும் இருவர், தாங்கள்  இருக்கும் இடத்தை  என்னாப்பு செயலி மூலமாகவே தெரிந்து கொள்ளும் புதிய வசதி தற்போது சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன்படி சில குறிப்பிட்ட என்னாப்பு குழுக்களில் உள்ளவர்கள், அவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என்பது அந்த குழுவின் குறிப்பிடப்படும். இந்த வசதியை தேவையென்றால் செயல்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அணைத்து வைத்துவிடலாம். இதன் மூலம் என்னாப்பு குழுவில் உள்ள ஒருவர், எந்த இடத்தில் இருந்து தற்போது பேசிக் கொண்டு  இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக, ஒருவர் தன்னுடைய செல்பேசி எண்ணை மாற்றுகிறார் என்றால், அது குறித்த தகவலை அவரது என்னாப்பு தொடர்பில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட  உள்ளது. தற்போது இந்த வசதியானது விண்டோஸ் திறன்பேசிக்கான  என்னாப்பின் பீட்டா 2.17.130 என்ற பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டால், உங்கள் செல்பேசி எண்ணை மாற்றிவிட்ட தகவலை ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்க வேண்டியதில்லை. வெறும் ஒரு பொத்தானை தட்டினாலே, உங்கள் செல்பேசியில் உள்ள என்னாப்பு தொடர்புகள் அனைவரின் எண்ணுக்கும்  தகவல் சென்று சேர்ந்துவிடும்.

நன்றி:www.whatsapp.com

Previous 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் இனம் கண்டுபிடிப்பு..!
Next பொது இடத்தில் திறன்பேசிக்கு சார்ஜ் செய்தால் சைபர் தாக்குதலில் சிக்க வாய்ப்புகள் அதிகமாம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *