1.25 கோடி சம்பளத்திற்கு ஆள் எடுத்துள்ள உபேர் நிறுவனம்..!


3-iit-madras

சென்னையிலுள்ள ஐ.ஐ.டி கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த தேர்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, திறமையான மாணவர்களுக்கு பல லட்ச ரூபாய் ஊதியத்திற்கு வேலைவாய்ப்பு அளிப்பது உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஐ.டி சென்னை வளாகத் தேர்வில், 26 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதன் மூலம் 130 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் படித்த முதுகலை தொழில்நுட்பம் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர் ஒருவரை, பிரபல கார் டாக்சி நிறுவனமான உபேர் சுமார் 1.25 கோடி ரூபாய் ஊதியத்திற்கு பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இளங்கலை தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரை 93 லட்ச ரூபாய் ஊதியத்திற்கு மைக்ரோ சாப்ட் நிறுவனமும், முதுகலை தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த மற்றும் ஒரு மாணவரை 85 லட்ச ரூபாய் ஊதியத்தில் ஆரக்கிள் நிறுவனமும் வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஊதிய விகிதங்கள் குறித்து சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் முதல் நாள் வளாகத் தேர்வில் பெரும்பாலான நிறுவனங்கள் மென்பொருள் முன்னேற்றம் குறித்த வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ததாகவும்,பெரும்பாலான வேலைவாய்ப்புகள் கணினி அறிவியல் மற்றும் மிண்ணனு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சில முன்னணி வன்பொருள் நிறுவனங்களும் இந்த வளாகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மைக்ரோசாப்ட், ஆரகிள், சாம்சங் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், இண்டெல், உபேர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் விசா ஆகிய நிறுவனங்கள் இந்த வளாகத் தேர்வில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வளாகத் தேர்வின் முதல் நாளில் தாங்கள் எதிர்பார்த்ததைவிட, அதிக திறமையுடன் மாணவர்கள் இருந்ததாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.ஐ.டி கல்லூரிகளில் நடைபெற்ற வளாகத் தேர்வுகளில் இதுதான் அதிக சம்பளம் எனவும் இதற்கு முன்னர் ரூர்க் ஐ.ஐ.டி மற்றும் கவுகாத்தி ஐ.ஐ.டி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததே, இதுவரை அதிகபட்சமான சம்பளம் எனவும் கூறப்படுகிறது.

நன்றி:http://www.thenewsminute.com/article/day-1-iit-madras-placements-uber-offers-top-pay-packet-53733

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Previous 6,50,000 கார்களை திரும்பப் பெறும் ஃபோர்டு நிறுவனம்..!
Next உங்கள் பற்று அட்டையை ஆறு நொடிகளில் ஹேக் செய்யலாம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *