தன் படம் எடுக்கும் போது அதிகம் உயிரிழப்பது இந்தியர்கள்தானாம்..!


3-selfie

உலகிலேயே ஆபத்தான இடத்தில் தன் படம் எடுக்கும் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிரிழப்பர்களில் இந்தியர்கள்தான் அதிகம் என்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிபரத்தை எடுத்த ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் தன் படம் எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை ஆராய்ந்துள்ளனர். தன் படம் எடுக்க முயன்று, அவை எடுக்கப்படாமல் ஒருவர் உயிரிழந்தால் அது தன் படம் எடுக்கும்போது ஏற்பட்ட உயிரிழப்பாக கருதப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 127 பேர் தன் படம் எடுக்கும் போது உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 76 பேர் இந்தியர்களாவர். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நாட்டில் 9 பேர் மட்டுமே தன் படம் எடுக்கும் போது உயிரிழந்துள்ளனர். 8 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும், 6 உயிரிழப்புகளுடம் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்த உயிரிழப்புகளில் மிகப்பெரியதாக கருதப்படுவது நாக்பூரில் நடைபெற்ற சம்பவமாகும். ஏரி ஒன்றில் படகுப்பயணம் மேற்கொண்ட ஒரு குழுவினர் தன் படம் எடுக்க முயற்சித்த போது, தீடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 7 பேர் பலியாகினர். உயரமான இடங்கள், நீர்நிலைகள், ஆயுதங்கள், வாகனங்கள், மின்சாரப் பாதை ஆகியவை தன் படம் எடுக்க ஆபத்தான இடங்களாக இந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட தன் படங்களை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு தன் படம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை இந்த குழுவினர் கணக்கிட்டுள்ளனர்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/more-indians-have-died-taking-a-selfie-than-any-other-nation-in-the-world-348335.html?utm_source=top_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

Previous பிரிட்டனின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஊருடுவிய ஹேக்கர்கள்..!
Next அரசு வரைபட தரவுகளை பயன்படுத்த கூகுள் மேப்பிற்கு தென் கொரியா தடை..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *