வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை தடை செய்ய டிவிட்டர் புதிய வசதி..!


6-twitter

தனி மனித தாக்குதல்கள், அநாகரீக வார்த்தைகள், நிற, இன வெறியை தூண்டும் பேச்சுகள் ஆகியவை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சம்மந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் இது மாதிரியான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை தடை செய்ய குறிப்பிட்ட பயனாளர்களின் டிவீட்களை தடை செய்யும் “mute” வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டிவிட்டரில் குறிப்பிட்ட கணக்கை தடை செய்யும் வசதி உள்ளது. ஆனால் இந்த புதிய வசதி மூலம், குறிப்பிட்ட கணக்கை தடை செய்யாமலே, அந்த கணக்கிலிருந்து வரக்கூடிய பதிவுகளையும், பதில்களையும் நமது கவனத்திற்கு கொண்டு வராமல் தடுக்க முடியும்.

குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கு மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட வார்த்தைகள், தலைப்புகள் கொண்டுள்ள டிவீட்களையும் இந்த வசதி மூலம் தடுக்கலாம். இன்னும் சில நாட்களில் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக வெறுப்புணர்வு பேச்சுகளை தடுக்க முடியாமல் டிவிட்டர் தடுமாறி வருகிறது. மேலும் இதுகுறித்த புகார்களும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே வேறு வழியில்லாமல் இந்த புதிய வசதியை டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை அறிய சில மாதங்கள் ஆகலாம். கடந்த ஜுலை மாதம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை பகிர்ந்த சில டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் நிரந்தமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/twitter-will-upgrade-features-to-combat-cyber-bullying-to-give-users-the-the-option-to-mute-347669.html

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

Previous லென்ஸ் இல்லாமல் படம் பிடிக்கும் புகைப்படக்கருவி-ஹிட்டாச்சி அறிமுகம்..!
Next ஏ.டி.எம்மில் பணம் இருப்பதை தெரிவிக்கும் சில இணையதளங்கள்...!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *