மீண்டும் களமிறங்கும் நோக்கியா..!


4-nokia

செல்பேசி விற்பனையில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நோக்கியா நிறுவனம், பல காரணங்களினால் மிகப்பெரிய சரிவை சந்தித்து செல்பேசி தயாரிப்பிலிருந்து சில காலத்திற்கு முன்னர் விலகிக்கொண்டது. அதன் பின்னர் நோக்கியாவை வாங்கிய பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியாவின் பெயரில் சில செல்பேசி வகைகளை தயாரித்து வெளியிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த செல்பேசிகள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் செல்பேசி தவிர்த்து மற்ற தொழில்நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தி வந்த நோக்கியா நிறுவனம், தற்போது மீண்டும் திறன்பேசி தயாரிப்பில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் ’டி 1 சி’ என்ற திறன்பேசியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த திறன்பேசியின் வடிவம், இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திறன்பேசி தங்கம், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் கைரேகை உணர்வி, 3.5 மி.மீட்டர் ஆடியோ ஜாக், தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாப்பு, ஸ்னாப் டிராகன் 820 அல்லது 430 பிராசசர், 3 ஜிபி ராம், 32 ஜி.பி உள்ளக நினைவகம், 13 மெகாபிக்சல் திறனுள்ள பின்புற புகைப்படக் கருவி, 8 மெகா பிக்சல் திறனுள்ள முன்புற புகைப்படக் கருவி ஆகிய வசதிகள் இந்த திறன்பேசியில் இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள திறன்பேசி என்பதால், செல்பேசி விரும்பிகளிடையே இந்த திறன்பேசி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோக்கியா திறன்பேசி நோக்கியாவின் பெயரை மீட்டெடுக்குமா? அல்லது அதலபாதளத்திற்கு தள்ளுமா?  என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

நன்றி:http://zeenews.india.com/mobiles/nokia-smartphones-to-be-back-soon-check-out-d1c-leaked-pic_1947446.html

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Previous முகநூல் மெசெஞ்சரில் சாட் பாக்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம்..!
Next ”சூப்பர் மூன்” நிகழ்வை பார்க்க நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *