இணைய வழி வங்கிச் சேவைக்காக கூகுள் புதிய வசதி..!


3-google-play-store

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவிப்பு வெளியானதிலிருந்து, அடுத்தகட்டமாக இனி என்ன செய்வது என பலர் குழப்பத்தில் உள்ளனர். கடன் அட்டை மற்றும் வரவு அட்டை பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்ற கேள்வி வாடிக்கையாளர்களின் மனதில் எழுந்து வருவது மறுக்க முடியாதது.

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனம் தனது தளத்தில் வாங்கப்படும் குறுஞ்செயலிகள், புத்தகங்கள் மற்றும் திரைப்பட நுழைவுச் சீட்டுகள் ஆகியவற்றுக்கு எளிய முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் கடன் அட்டை, வரவு அட்டை மற்றும் பிளே ஸ்டோர் பரிசு அட்டை ஆகியவற்றை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் உள்ளது. இதில் நாம் பல கட்டங்களைத் தாண்டிதான் பணம் செலுத்த முடியும்.

ஆனால் இனி நமது வங்கிக் கணக்கை நேரடியாக நாம் கூகுள் பிளே ஸ்டோரில் இணைத்துக் கொள்ளலாம். இதற்காகவே கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய 30 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் கடன் அட்டை, வரவு அட்டை ஆகியவற்றை பயன்படுத்தாமல், இரண்டு அல்லது மூன்று தேர்வுகளின் முடிவில் நாம் பணம் செலுத்திவிட முடியும்.

தற்போது மெல்ல வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்று வரும் இந்த வசதி, ஆன்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும் நெக்சஸ் எக்ஸ்.பி திறன்பேசியில் செயல்படவில்லை. எனவே உங்கள் திறன்பேசியில் உள்ள பிளே ஸ்டோர் குறுஞ்செயலியில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்துவிட்டு, உங்கள் வங்கிக் கணக்கை இணைப்பது நல்லது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/netbanking-payment-option-rolling-out-on-the-google-play-store-in-india-346097.html?utm_source=related_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous முகநூலில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அதிகம் பேசியுள்ள இந்தியர்கள்..!
Next பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை : மின்னணு பண பரிவர்த்தனை நிறுவனங்கள் வரவேற்பு..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *