பிரபல ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் ”ஹைபர்லூப்” என்ற புதிய போக்குவரத்து வசதியை கண்டுபிடித்துள்ளது. நாளை இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் விவரிக்க உள்ளார். இந்நிலையில் ஹைபர்லூப் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பதுகுறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் ஹைபர் லூக் போக்குவரத்து மூலம் துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஹைபர் லூப் போக்குவரத்தானது, விமானத்தை விட வேகமாக செல்லக் கூடியது. எதிர்காலத்தில் துபாயிலிருந்து அபுதாபிக்கு ஹைபர் லூப் செயல்படுமானால், அதன் வேகம் மணிக்கு 800 கி.மீட்டராக இருக்கும்.
காற்றுப்புகாத ஒரு குழாய் வழியாக செல்லும்படி ஹைபர் லூப் வாகனத்தின் ஓடுபாதையானது அமைக்கப்பட்டிருக்கும்.அந்த குழாயினுள் இருக்கக்கூடிய குறைந்த உராய்வு காரணமாக மிக வேகமாக ஹைபர் லூப் வாகனத்தினால் செல்ல முடியும். மிக வேகமான ரயில் சேவையாக அறியப்படும் புல்லட் ரயிலின் வேகமே மணிக்கு 300 கி.மீட்டர் மட்டும்தான்.
ஒருவேளை ஹைபர் லூப் போக்குவரத்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு வெறும் 46 நிமிடம் 56 வினாடிகளில் அடையமுடியும். பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு 20 நிமிடம் ஆறு விநாடிகளில் அடைய முடியும்.
ஹைபர் லூப் பயணம் எப்படி இருக்கும்? அதுஎவ்வாறு செயல்பட உள்ளது? என்பதை இந்த லிங்கை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
No Comment