சமீபத்தில் என்னாப்பு குறுஞ்செயலியின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி என்னாப்பு பயனாளர்களின் தனிப்பட்ட செல்பேசி எண்கள் மற்றும் சில விபரங்கள் என்னாப்புவின் தாய் நிறுவனமான முகநூலுக்கு அளிக்கப்படும். இந்த புதிய மாற்றம் குறித்து என்னாப்புவின் பயனாளர்கள் யாருக்கும் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. என்னாப்புவை முகநூல் வாங்கியதிலிருந்து, அதன் விதிமுறைகளில் செய்யப்படும் முதல் மாற்றம் இதுவாகும்.
ஆனால் இந்த விதிமுறை மாற்றம், என்னாப்பு பயனாளர்களின் ரகசியத்தை வெளிப்படுத்துவது போல இருப்பதாகவும், இது குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய கூட்டமைப்பின் இணைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சரியான விளக்கத்தை அளிக்கும் வகையில் தனது பயனாளர்களின் தகவல்களை, முகநூலுக்கு அளிப்பதை என்னாப்பு நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய யாகூ நிறுவன மின்னஞ்சல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்தும் அந்நிறுவனத்திடம் இந்த அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
ஆனால் இணைய பாதுகாப்பு அதிகாரிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள முகநூல் நிறுவனம், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே என்னாப்பு பயனாளர்களின் விபரங்கள் தங்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு தேவையான விளக்கத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் என்னாப்பு மற்றும் யாகூ நிறுவனங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
No Comment