சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 திறன்பேசிகள் தீப்பற்றி எரிந்ததற்காக காரணத்தை கண்டறிவதற்காக சாம்சங் நிறுவனம் விசாரணைக்குழு ஒன்றை அமைத்தது. தற்போது விசாரணையில் ஈடுபட்டு வரும் இந்த குழு, இந்த ஆண்டு இறுதிக்குள் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது சில நோட் 7 திறன்பேசிகளின் பேட்டரிகளில் குறைபாடு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அதற்கான உண்மையான காரணம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
சாம்சங்கின் துணை நிறுவனமான சாம்சங் எஸ்.டி.ஐ நிறுவனம்தான், நோட் 7 திறன்பேசிகளுக்கான 60 சதவீத பேட்டரிகளை தயாரித்து வழங்கியது. ஆனால் இந்த பிரச்சனை நோட் 7 திறன் பேசியில் மட்டும்தான் ஏற்பட்டதாகவும், சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள திறன்பேசிகளுக்கு தொடர்ந்து பேட்டரிகளை தயாரித்து வழங்கி வருவதாகவும் எஸ்.டி.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோட் 7 சர்ச்சைக்கு பிறகு தாங்கள் உற்பத்தி செய்யும் பேட்டரிகளை பல கட்டங்களாக சோதித்த பின்னரே விற்பனைக்கு அனுப்புவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையில், எஸ்.டி.ஐ நிறுவன பேட்டரியில் குறைபாடு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த நிறுவனத்திடமிருந்து பேட்டரிகளை கொள்முதல் செய்வதை சாம்சங் நிறுவனம் தடை செய்யும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
No Comment