பேட்டரி கோளாறு காரணமாக இதய துடிப்புக் கருவிகளை திரும்பப் பெறும் நிறுவனம்..!


st-jude-medical

சாம்சங் நிறுவனத்திற்குதான் பேட்டரியில் கெட்ட நேரம் என்றால், இதய துடிப்பை சீர் செய்யும் கருவிகள் தயாரிப்பில் பெயர் போன செயிண்ட் ஜூடு நிறுவனத்திற்கு பேட்டரியால் பிரச்சனை வந்துள்ளது. இந்த நிறுவனம் இதயத்துடிப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ள நோயாளிகளுக்கு, அதனை சீராக மாற்றும் கருவிகளை தயாரித்து வருகிறது. சிறிய அறுவை சிகிச்சை மூலம் மனித உடலுக்குள் பொருத்தப்படும் இந்த கருவிகள், பேட்டரி மூலம் இயங்கக் கூடியவை.

இந்த பேட்டரிகள் 90 நாட்களில் சக்தியை இழந்துவிடும் என்பதால், அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி ஆற்றல் குறைவாக இருந்தால், சில நாட்களுக்கு முன்பே அந்த கருவி தகவல் தெரிவித்துவிடும். இதனை தொடர்ந்து அந்த பயனாளர், தக்க மருத்துவர்களை அணுகி, அந்த கருவியை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஐரோப்பாவைச் சேர்ந்த இருவருக்கு பொருத்தப்பட்டிருந்த கருவிகள் சரியான நேரத்தில் பேட்டரி சார்ஜ் குறித்து தகவல் தெரிவிக்காததால், அந்த பயனாளர்கள் இதய துடிப்பு தாறுமாறாகி உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே 23-ஆம் தேதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் இதயத் துடிப்புக் கருவிகளை திரும்பப் பெறுவதாக செயிண்ட் ஜூடு நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துத் துறை அதிகாரிகள், பயன்படுத்தப்படாத இதயத் துடிப்புக் கருவிகளை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு பதிலாக தயாரிப்பு நிறுவனத்தை அணுகி புதிய கருவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனை காரணமாக செயிண்ட் ஜூட் நிறுவனத்தின் பங்குகள் 3.2 சதவீத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சில நிறுவனங்கள், இந்த ஆண்டு இறுதியுடன் தங்கள் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/st-jude-medical-institute-to-recall-400000-implanted-heart-devices-after-two-deaths-in-europe-340388.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous உலகின் சிறந்த, எடை குறைவான தலைக்கவசம்..!
Next புற்றுநோய் மருத்துவத்தின் புதிய மைல்கல் ”இம்யூனோதெரபி”..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *