ஜியோ சிம்மை எளிதில் பெறுவது எப்படி?


6-jio

வரையறையற்ற கால் மற்றும் வரையறையற்ற இணைய டேட்டா வசதிகளை அளித்ததால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் அலுவலக வாசலில் ஜியோ சிம்மை வாங்குவதற்காக தினம் தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் ஜியோ சிம் வாங்க ஆசையிருந்தும், சிம் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்ட ஜியோ நிறுவனம், ஜியோ சிம்மை பெறுவதற்கான எளிய வழிமுறையை அறிவித்துள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

உங்கள் போனிலிருந்து இலவச எண்ணான 1800-200-200 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். உங்கள அழைப்பானது தானாகவே துண்டிக்கப்படும். பின்னர் உங்கள் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அந்த குறுஞ்செய்தியில் இணையதள லிங்க் ஒன்று அனுப்பப்பட்டிருக்கும். அந்த லிங்கை அழுத்துவதன் வாயிலாக ஜியோவின் குறுஞ்செயலியை பதிவறக்கம் செய்யக் கூடிய பக்கம் தோன்றும்.

அந்த பக்கத்தின் மூலமாக உங்கள் போனில் ஜியோ குறுஞ்செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த குறுஞ்செயலியை திறந்து ‘get jio sim’ என்பதை தேர்வு செய்யவும். அதன் பின்னர் ‘Agree’ என்பதை தேர்வு செய்யவும்.

இதன் பின்னர் ‘get jio sim offer’ என்பதை தேர்வு செய்யவும். இதன் பின்னர் ‘location’ என்பதை தேர்வு செய்து, நீங்கள் இருக்கும் மாநிலம், மாவட்டம் ஆகியவை குறித்த தகவல்களை அளிக்கவும்.

இவை எல்லாவற்றையும் நீங்கள் சரியாக செய்து முடித்தால் “offer code” என்ற பெயரில் ஒரு எண் திரையில் தோன்றும். அந்த எண்ணை கவனமாக குறித்து வைத்துக் கொள்ளவும்.

இதன் பிறகு உங்களுக்கு அருகில் உள்ள ரிலையன்ஸ் அலுவலகத்தை அணுகி, உங்களிடம் உள்ள அந்த எண்ணை அளிக்க வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின் எண்ணையும் அளிக்க வேண்டும். இதனை பெற்றுக் கொள்ளும் அலுவலக ஊழியர், சில நடைமுறைகளை முடித்த பின்னர், சில நிமிடங்களில் உங்களுக்கு ஜியோ சிம்மை தருவார்.

இதன் மூலம் நீங்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் தவிர்க்கப்படும். எளிதாக ஜியோ சிம்மை பெறவும் முடியும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous சாம்சங் நோட்-7 தடையால் ஆப்பிள் நிறுவன பங்குகள் உயர்வு..!
Next இங்கிலாந்து தெருக்களில் தானியங்கி கார் சோதனை ஓட்டம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *