உத்திரபிரதேசத்தில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் அறிமுகம்..!


3-smart-phone-plan

தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு உத்தரபிரதேச மாநிலமும் மின்னணு பொருட்களை இலவசமாக கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் போல் மடிக்கணினி இல்லாமல் ஸ்மார்ட்போன் தரும் ‘சமாஜ்வாடி ஸ்மார்ட்போன் யோஜனா’ என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆறு லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்போன் பெற விரும்புபவர்கள் “ samajwadisp.in” என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது. அதாவது அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெற்றால் மட்டுமே, ஸ்மார்ட்போன் அளிக்கப்படும் என சொல்லாமல் சொல்லியுள்ளது அந்த கட்சி. அதற்கேற்றவாறு செல்போன் பதிவிற்காக அறிவிக்கப்பட்ட இணையதளம் செயல்படவே இல்லை. ஆனாலும் உத்தர பிரதேச மாநிலத்தை டிஜிட்டல் மாநிலமாக மாற்றுவேன் என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கூறி வருகிறார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/chief-minister-akhilesh-yadav-launches-samajwadi-smartphone-scheme-340285.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous கேலக்சி நோட் 7 உற்பத்தி நிறுத்தம்..!
Next ஸ்மார்ட்போன் தொழிலில் குதிக்கும் கேடாக் நிறுவனம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *