”ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வியில் முடியவில்லை”-தொலைதொடர்பு அமைச்சர் தகவல்..!


1-auction

இந்தியாவின் மிகப்பெரிய ஏலமாக கருதப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை  ஏலமானது நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசு 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு ஏலம் லாபகரமாக நடைபெறவில்லை.

குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 60 சதவீதம் கொண்ட,  4 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட, 700 Mhz மற்றும் 900 Mhz ஆகிய அலைவரிசைகளை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ளதாக பரவலாக பேச்சு எழத் தொடங்கியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா, ”இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலங்களில், இந்த ஏலத்தில் தான் அதிக தொகை ஈட்டப்பட்டுள்ளது. எனவே இதனை தோல்வி என ஏற்றுக்கொள்ள முடியாது.” என தெரிவித்துள்ளார்.

2,354 MHz அலைவரிசையில் 41 சதவீதம் விற்பனையாகியுள்ளதாகவும், எனவே இனி வரும் காலங்களில் செல்போன் அழைப்புகளின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்களன்று துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலமானது 700 MHz, 800 MHz, 900 MHz, 1,800 MHz, 2,100 MHz, 2,300 MHz மற்றும் 2,500 MHz ஆகிய ஏழு அலைவரிசைகளுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/not-a-failure-but-a-record-in-terms-of-sales-says-communications-minister-about-spectrum-auction-339745.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous கடன் அட்டை மோசடியை தடுக்க புதிய தொழில்நுட்பம்..!
Next ஐபோனுக்கு சலுகைகளை அள்ளித்தரும் ரிலைன்ஸ் ஜியோ..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *