முகத்தில் சுருக்கமா? தொழில்நுட்பம் இருக்க, கவலை எதற்கு?


7-smart-mirror

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் தனது முக அழகு குறித்து கவலைப்படாமல் இருக்க மாட்டான். அதனால்தான் இன்று உலகத்திலேயே அதிக பணம் புழங்கும் வியாபாரங்களில் ஒன்றாக முக அழகுப் பொருட்கள் சந்தை உள்ளது.

இந்நிலையில் எந்த முகப்பூச்சும் இன்றி, தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் முகத்தை அழகாக்கும் இயந்திரத்தை பேனாசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

”ஸ்மார்ட் மிர்ரர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம். ஒரு கண்ணாடி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி முன் ஒருவர் நிற்கும் போது, கண்ணாடியில் நான்கு புறமும் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமிராக்கள் அவருடைய முகத்தை பல்வேறு கோணங்களில் படம் எடுக்கும்.

எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம், அவரின் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மாசு, மருக்கள் துல்லியாக கண்டறியப்படும். பின்னர் இந்த இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ”அச்சிடு” என்ற பொத்தானை அழுத்தினால், முகத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளை சரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மெல்லிய தாள் முகமூடி போல அச்சாகி வெளிவரும்.

இந்த முகமூடியை அவர் தனது முகத்தில் ஒட்டிக்கொண்டு சில நிமிடம் காய விட்டால், முகப்பூச்சுகளை பூசியது போல மிகப் பொலிவான முகத்தோற்றம் கிடைக்கும். முகத்தில் உள்ள பள்ளங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை இந்த முகமூடி மறைத்துவிடும். இதனால் முகப்பூச்சு என்பதற்கு வேலையே இருக்காது.

இந்த இயந்திரத்தின் சோதனை வடிவம் இந்தாண்டு ஜனவரியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் மேம்பட்ட வடிவம் ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் நாம் முகத்தில் ஒட்டிக்கொள்ளும் முகமூடியானது, ஒரு நாள் வரை தாக்குப்பிடிக்கும். தண்ணீரை முகத்தில் ஊற்றி மிக எளிதாக இதனை முகத்தில் இருந்து அகற்றிவிட முடியும். இதுமட்டுமல்லாது விதவிதமாக முக அலங்காரங்கள் செய்து கொள்ளவும் இந்த இயந்திரம் உதவும்.

தற்போது ஆரம்பக் கட்ட சோதனையில் இந்த இயந்திரம் உள்ளது. அழியாத வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை நிரந்தரமாக மறைக்கும் வகையில் இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த, பேனாசோனிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

நன்றி:http://www.dailymail.co.uk/sciencetech/article-3822383/The-smart-mirror-print-perfect-personalised-makeup-mask.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous முகநூல் மெசெஞ்சரிலும் இனி உங்கள் குறுஞ்செய்திகள் பாதுகாக்கப்படும்..!
Next தனிமையாக உணர்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு குட்டி ரோபோ வந்தாச்சு..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *